தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.  இன்றுவரை இவரது படங்கள் வெளியானால் ரசிகர்கள் கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது என திரையரங்குகளே விழாக்கோலமாக காட்சியளிக்கும்.  ரஜினிக்கு 71 வயது ஆனபோதிலும் அவர் நடிப்பில் இன்றளவிலும் சிறிது மாற்றமில்லை, இந்த வயதிலும் அதே துள்ளலோடு நடித்து வருகிறார்.  தற்போது நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.  இவர் கடந்த 1981ம் ஆண்டு லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஸ்வர்யா ரஜினிகாந்த, நடிகர் தனுஷை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், இந்த தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர்.  சில மாதங்களுக்கு முன்னர் இந்த ஜோடி தாங்கள் பிரியப்போவதாக அறிவித்து தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.  ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த 2010-ல் அஷ்வின் என்பவரை மணந்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார், கடந்த 2019-ல் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.  அதன்பிறகு சௌந்தர்யா ரஜினிகாந்த் நடிகர் விசாகன் வணங்காமுடி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு அவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.



மேலும் படிக்க | 'தளபதி-67' படத்தில் இத்தனை வில்லன்களா? அடுக்கடுக்கடுக்காக வெளியான அப்டேட்டுகள்!


சில தினங்களுக்கு முன்னர் விசாகன் வீட்டில் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடப்பட்டது. விசாகன்-சௌந்தர்யா தம்பதியரின் முதல் குழந்தை அக்டோபர் மாதத்தில் பிறக்கும் என்று மருத்துவர்கள் தேதி கொடுத்துள்ளனர்.  ஐஸ்வர்யா-தனுஷ் பிரிவினால் கவலையில் இருந்த குடும்பத்தினருக்கு தற்போது இந்த செய்தியால் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்துள்ளது, இதன்மூலம் நான்காவது முறையாக ரஜினிகாந்த் தாத்தாவாக போகிறார்.



மேலும் படிக்க | 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்ட தமன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ