சூப்பர் ஸ்டார் வீட்டில் இருந்த கொசு பேட்டின் விலை எவ்வளவு தெரியுமா?
ரஜினிகாந்த் - ரிஷப் ஷெட்டி சந்திப்பின் போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த கொசுக்கொல்லி பேட்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காந்தாரா. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்னையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்யும் படமாக காந்தாரா வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கிஷோர், சப்தமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பை அடுத்து படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட போவதாக படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி காந்தாரா தமிழில் டப் செய்யப்பட்டும் சமீபத்தில் வெளியானது. படத்தை பார்த்த தமிழ் ரசிகர்களும் மிகப்பெரிய வரவேற்பை படத்துக்கு கொடுத்துள்ளனர். குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பிரமிப்பாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டும்வருகின்றனர். மேலும், நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து எழுதியிருக்கும் திரைக்கதையையும் பலர் பாராட்டிவருகின்றனர்.
மேலும் படிக்க | கேரளாவில் அதிகம் வசூல் செய்த டாப் 3 தமிழ் படங்கள்
அந்த வகையில், சில நாள்களுக்கு முன்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் ரிஷப் ஷெட்டி சந்தித்து பேசி ஆசி பெற்றுக்கொண்டார். நீண்ட நேரம் ரிஷப்புடன் உரையாடிய ரஜினிகாந்த் இந்தியாவின் மிகச்சிறந்த படம் காந்தாரா என்று புகழ்ந்தார்.
இருவரும் சந்தித்தபோது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரிஷப் ஷெட்டி தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டார். அதில், ரஜினிகாந்த் கருப்பு நிற சட்டையுடன், வேட்டி அணிந்து வழக்கம்போல் கிளாஸாக தோற்றமளித்தார். ஆனால், இந்த முறை அவரின் வீட்டில் இருந்த கொசுக்கொல்லி பேட் தான் அந்த புகைப்படத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
சூப்பர் ஸ்டார் வீட்டிலும் கொசுக்கொல்லி பேட்கள் இருக்கிறது என பல ரசிகர்கள் வியந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். கொசுவிற்கு சூப்பர் ஸ்டார் வீடு, மற்றவர்கள் வீடு என பிரித்து பார்க்க தெரியாது என்றும், அனைவரின் வீட்டிலும் கொசுத்தொல்லை இருக்கும் என்றும் ரசிகர்களை பலரும் கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில், அந்த கொசுக்கொல்லி பேட்டின் விளம்பரம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, ரஜினிகாந்த் - ரிஷப் ஷெட்டியின் புகைப்படத்தை பதிவிட்டு, அதில் அந்த பேட்டின் விலை ரூ. 749 எனவும், அது அமேசானில் கிடைக்கும் எனவும் ட்வீட்டில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இதை @Tech_glareOffl என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் பயனர் ட்வீட் செய்துள்ளது. இந்த ட்வீட்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சகல வசதிகள் உள்ள போயஸ் கார்டன் பகுதியிலேயே கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது என்றால் சென்னையின் மற்ற பகுதிகளின் நிலைமையை நினைத்து பாருங்கள் என பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி வெளியீட்டால் அதிருப்தியடைந்த ரசிகர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ