தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவு திட்டமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் வெற்றிகரமாக இயக்கி வெளியிட்டுவிட்டார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் அமோக வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் இதன் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரஹ்மான், அஷ்வின், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, பிரபு மற்றும் விக்ரம் பிரபு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | பிரமாண்டமாக உருவாகும் 'டபுள் எக்ஸ்எல்' : பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் மஹத்
சோழ பேரரசின் சிறப்புகளை கூறும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்துள்ளது. அயல்நாடு உட்பட பல இடங்களில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்கிற பெருமையை பொன்னியின் செல்வன் திரைப்படம் பெற்றிருக்கிறது. இந்த படத்தை திரையில் கண்டுகளித்த ரசிகர்கள் பலரும் படத்தை ஓடிடியில் காண ஆர்வமுடன் காத்துகொண்டு இருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தது போல பொன்னியின் செல்வன்-1 படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் இப்போது ஓடிடியில் அப்படத்தை பார்க்க வேண்டும் என்றால் அமேசான் ப்ரைம் பயனர்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் நவம்பர்-4ம் தேதிக்கு பிறகு இலவசமாக பார்த்துக்கொள்ளலாம் என்றும் ஓடிடி நிறுவனம் தெரிவித்துள்ளது, இருப்பினும் கட்டணம் செலுத்தி படத்தை பார்க்கும் திட்டம் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. கட்டணம் செலுத்தி படத்தை பார்ப்பது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் ஓடிடியில் 'பொன்னியின் செல்வன்-1' படத்தின் ஹிந்தி வெளியீடு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை, ஆனால் சில தகவல்களின்படி, இப்படத்தின் ஹிந்தி வெர்ஷன் ஓடிடியில் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | கமலால் கடனாளி ஆனேனா?... முற்றுப்புள்ளி வைத்த லிங்குசாமி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ