கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. தனது முதல் படத்திலே இவர் அசத்தலான வெற்றிப் படத்தார். இவரது இயக்கத்தால் கோலிவுட் வட்டாரமே அசந்து போனது. தற்போது அவரின் அடுத்த படம் குறித்து ஒரு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ரஜினிகாந்த் (Rajinikanth) நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக உறுதியாகியுள்ளது. முன்னதாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் (Kannum Kannum Kollaiyadithaal) படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை பாராட்டி ஆடியோ செய்தி அனுப்பி இருந்தார். இந்த ஆடியோ இணையத்தில் வைரலானது. 


ALSO READ | ரஜினியின் பாபுலாரிட்டி சரிகிறதா... வெளிவராத சில முக்கிய தகவல்கள்


மேலும் தனக்காக ஒரு கதை எழுதுமாறும் நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். அதிலிருந்து தேசிங்கு பெரியசாமி ரஜினியை வைத்து படம் இயக்க இருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. தற்போது ரஜினிகாந்த், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. பிரபல  தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஒரு சில படப்பிடிப்பு தற்போது நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. அண்ணாத்த படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி படத்தில் ரஜினி இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ALSO READ | Viral Video: ரஜினிகாந்தைப் போல சூப்பர் ஸ்டண்ட் செய்ய முயன்று அடிபட்ட டூப்ளிகெட் ரஜினி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR