ஜெயிலர் படத்தை பார்த்தவுடன் ரஜினி கூறியது என்ன..? நெல்சன் பகிர்ந்த சுவாரஸ்யம்..!
Jailer Thanks Meet: ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு ரஜினி தன்னிடம் என்ன கூறினார் என்பதை நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வசூலையும் குவித்து வருகிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைப்பெற்றது.
ஜெயிலர் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு..
ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியனாக அவதாரம் எடுத்துள்ள படம், ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நெல்சன் திலீப்குமார் இந்த படத்தினை இயக்கியுள்ளார். இதில் இந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய திரையுலகை சேர்ந்த நடிகர்கள் காமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பீஸ்ட் படத்திற்கு வந்த நெகடிவ் விமர்சனங்களை அடுத்து நெல்சன் இயக்கிய படம் என்பதால், ஜெயிலர் படத்தின் மீது பலருக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தன. அதை, நெல்சன் சரியாக நிறைவேற்றி உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலக அளவில் ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஜெயிலர் படத்தை பார்த்து விட்டு ரஜினி கூறியது…
ஜெயிலர் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் நடைப்பெற்றது. இதில் இயக்குநர் நெல்சன், நடிகர் வசந்த் ரவி, நடிகை மிர்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் நெல்சன் ரஜினியுடன் பகிர்ந்த சில சுவாரஸ்யமான தருணங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு தன்னிடம் என்ன கூறினார் என்பதை பகிர்ந்து கொண்டார்.
ஜெயிலர் படத்தை பார்த்த ரஜினிகாந்த், தனக்கு ஒரு ஹார்ட் எமோஜியை அனுப்பியதாக நெல்சன் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர் படம் இந்த அளவிற்கு நன்றாக வரும் என்று நினைக்கவில்லை என்று குறிப்பிட்டார். படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ரஜினிகாந்த் சார் தான் என்றும் அவர் தன் இமேஜை ஒதுக்கி வைத்து விட்டு, நாம் சொல்வதை கேட்டு சீனில் ஆர்வத்தோடு பங்கேற்றார் என்றும் நெல்சன் குறிப்பிட்டிருந்தார்.
“ரஜினி சார் எனக்கு அப்பா மாதிரி..”
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்தின் மகனாகவும் காவல் அதிகாரியின் கதாப்பாத்திரத்திலும் வசந்த் ரவி நடித்திருந்தார். இவர், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து காெண்ட போது ரஜினிகாந்த் குறித்த பல நெகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர், “ரஜினிகாந்த் சாருடன் ஸ்கிரீனில் ஒரு சீன் கிடைத்தாலே பெரிய விஷயம் என்று நினைத்தேன். அந்த கனவு எல்லா நடிகர்களுக்கும் இருக்கும்” என்றார். மேலும் தனக்கு அந்த கனவு நிறைவேறியுள்ளதாகவும் மகனாக ரஜினிகாந்த் சாருடன் நடித்தது எனக்கு ஆசிர்வாதம் தான் என்றும் கூறினார். ஜெயிலர் ஷூட்டிங்கின் போது ஒவ்வொரு நாளும் ரஜினி சாரிடம் இருந்து என்ன கற்றுக் கொள்ள போகிறோம் என்ற ஆவல் இருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் ஜெயிலர் படத்தின் இறுதி நாள் ஷூட்டிங்கில், ரஜினிகாத்தினடம் “ மிஸ் யூ சார்” என்று சொன்னதாகவும் அதற்கு அவர் தன்னிம் “மிஸ் யூ சோ மச்” என்று கூறியதாகவும் குறிப்பிட்டார். மேலும், “நான் அவரை எனது அப்பாவாக தான் பார்க்கிறேன் என்றும் நாம் இருவரும் இணைந்து அடுத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று நான் சொன்னதை ரஜினிகாந்த் சாரும் ஏற்று கொண்டார். ரஜினிகாந்த் சாருக்கு ரொம்ப நன்றி” என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | “ரஜினி சார் எனக்கு அப்பா மாதிரி..” ஜெயிலர் பட நடிகர் நெகிழ்ச்சி பேச்சு..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ