லால் சலாம் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படம் இந்த ஆண்டு இறுதியில் திரையரங்கில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படமான லால் சலாம் படத்தில் ஒரு நீண்ட கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங்கை ரஜினிகாந்த் சமீபத்தில் முடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் ஐஸ்வர்யா ரஜினி நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனராக வருகிறார். லால் சலாமில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கியுள்ள சம்பள திரையுலகில் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கேமியோவுக்கு சம்பளமாக 40 கோடி ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஐஸ்வர்யா ரஜினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லால் சலாம் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து, "மொய்தீன்பாய்.. வெல்கம்..." என்று கூறி இருந்தார். இந்த போஸ்டரில், சூப்பர் ஸ்டார் ரஜினி குர்தா மற்றும் சிவப்பு தொப்பி அணிந்து காணப்பட்டார்.
மேலும் படிக்க | ஏஆர் முருகதாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் இசையமைத்து உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில், ஏஆர் ரஹ்மான் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் லால் சலாம் படத்திற்காக ஹார்மோனியம் வாசிக்கும் வீடியோவை பகிர்ந்து இருந்தார். அதில், "மும்பையில் லால் சலாம் படத்திற்காக மிகவும் நம்பிக்கைக்குரிய பெண் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் உள்ளேன்" என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையில், ரஜினிகாந்த் தவிர, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கபில்தேவும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதியில் லால் சலாம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு தோற்றத்தின் மூலம், ரஜினிகாந்த் ஜெய்லர் படத்திற்கு பிறகு மீண்டும் திரையரங்கை அதிர செய்யவுள்ளார். மொய்தீன் பாயின் கேமியோவை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். நீண்ட காலமாக முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிக்காத ரஜினி இந்த படத்தில் நடித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால் நடிப்பில் வெளியான ஜெய்லர் படம் வசூல் சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட் 10 வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஜெயிலர் திரைப்படத்தினை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 240 கோடி ரூபாய் செலவில் உருவான இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூலே 60 கோடியை தாண்டியது. படம் வெளியாகி பல நாட்களான நிலையில், படத்தின் வசூல் தற்போது 600 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ஜெயிலர் படம் வெளியாகி உள்ளது.
லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ஞானவேல் மற்றும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் ஞானவேல் படம், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து லோகேஷ் கனகராஜ் படத்திலும் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். அநேகமாக லோகேஷ் படம் தான் ரஜினியின் நடிப்பில் வெளியாகும் கடைசி படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.
மேலும் படிக்க | 96வது ஆஸ்கர் விருது விழா: இந்தியா சார்பில் '2018' மலையாள படம் தேர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ