காவிரி மேலாண்மை வாரியம் ஒன்று மட்டுமே தீர்வு :ரஜினிகாந்த்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:-
"காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி: உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், காலம் தாழ்த்தி வந்தது மத்திய அரசு. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது பற்றி இதுவரை எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முடிவெடுக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் விவசாயிகள் போராடி வருகின்றனர். தமிழக அரசும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ஆலோசனை கூட்டம் கூட்டியுள்ளது.
இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
காவிரி விவகாரம் தொடர்பாக EPS மற்றும் MKS சந்திப்பு!
காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும். நீதி நிலைமாட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.