16 வயது ஸ்ரீதேவியை பெண் கேட்க சென்ற ரஜினி! சர்ச்சையில் சிக்கிய சூப்பர் ஸ்டார்!
Rajinikanth Sridevi Relationship: நடிகர் ரஜினி, தன்னுடன் பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்த ஸ்ரீதேவியை ஒரு காலத்தில் பெண் கேட்க சென்றதாக கூறப்படுகிறது. இது உண்மையா? இங்கு பார்ப்போம்.
K Balachander About Rajinikanth and Sridevi Relationship : தமிழ் திரையுலகில் சுமார் 45 வருடங்களுக்கும் மேலாக ‘ஸ்டார்’ நடிகராக வலம் வருபவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர், ப்ளாக் அண்ட் வைட் படங்களில் அதிகம் ஜோடி போட்டு நடித்தது, ஸ்ரீதேவியுடன்தான். இவருக்கும் ஸ்ரீதேவிக்கும் திரைக்கு முன்னால் மட்டுமன்றி, திரைக்கு பின்னாலும் நல்ல உறவு இருந்துள்ளது. ஆனால் அந்த உறவு காதல் உறவா? அல்லது வெறும் நட்புதானா? இங்கு பார்க்கலாம்.
ரஜினி-ஸ்ரீதேவி ஒன்றாக சேர்ந்து நடித்த படங்கள்..
நடிகர் ரஜினி, முதன் முதலாக ஸ்ரீதேவியுடன் சேர்ந்து நடித்த முதல் படம், ‘மூன்று முடிச்சு’. 1976ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு 25 வயது சித்தியாக நடித்திருப்பார், ஸ்ரீதேவி. அப்போது அவருக்கு வயது 13தான். இந்த படத்தில் ஆரம்பித்த இவர்களின் பந்தம் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவருமே அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, நான் ஜானி, வணக்கத்துக்குரிய காதலியே என மொத்தம் 4 மொழிகளில் 22 படங்களில் சேர்ந்து நடித்தனர். அண்ணன்-தங்கையாக ஒரே ஒரு படத்தில் மட்டும் சேர்ந்து நடித்துள்ளனர். அப்போது திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக இருந்த கமலும் ரஜினியும் தங்களது ஆசிரியரும் இயக்குநருமான கே.பாலச்சந்தர் மற்றும் ஸ்ரீதேவியுடனும் நல்ல பந்தத்துடன் இருந்தனர்.
ஸ்ரீதேவியை காதலித்த ரஜினி..?
நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீதேவியுடன் பல படங்களில் ஒன்றாக நடிப்பதற்கு முன்னாள் இருந்தே, அவரது குடும்பத்தினருக்கும் குறிப்பாக ஸ்ரீதேவியின் தாயாருடன் நெருங்கிய நட்புடன் பழகினார். ஸ்ரீதேவி, ரஜினியை விட 13 வயது இளையவர். இதனாலேயே, ரஜினி அவர் மீது மிகுந்த பாதுகாப்பு உணர்வோடு இருந்ததாக கூறப்படுகிறது. ஒன்றாக பல படங்களில் ஒன்றாக நடித்திருந்தாலும் இவர்களுக்குள் காதல் என்ற ஒன்று இருந்ததாக எந்த தடையமும் இல்லை. ஸ்ரீதேவி, ரஜினியை காதலித்தாரா என்பதற்கான தகவலும் இல்லை. ஆனால், ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை காதலித்ததாக இயக்குநர் கே.பாலச்சந்தர் ஒரு பத்திரிக்கை பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | தலைவர் 171 படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஸ்ரீதேவிக்கு 16 வயது இருந்த போது அவரை தனக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து அவரது தாயாரிடம் கேட்க இருந்தாராம் ரஜினி. இது குறித்து பேசிவதற்காக பாலச்சந்தரும் ரஜினிகாந்தும் ஸ்ரீதேவியின் கிரகப்பிரவேச விழாவின் போது அவரது இல்லத்திற்கு சென்றதாகவும் அப்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருட்டானதாகவும் இதனால் செண்டிமெண்டாக ரஜினி அது குறித்து பேசாமலேயே வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பிரபலம் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
ரஜினி-ஸ்ரீதேவி இடையே இருந்த உறவு..
ரஜினிகாந்தும் ஸ்ரீதேவியும் ஒன்றாக நடித்துக்கொண்டிருந்த போதும், அதற்கு பிறகும் கூட நல்ல நட்புடன் இருந்து வந்தனர். அந்த காலத்தில் ரஜினியின் தனிப்பட்ட போன் நம்பர் குடும்பத்தினரை கே.பாலச்சந்தர், கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோரிடம் மட்டுமே இருந்ததாம். ஒரு முறை, நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்கோளாறு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது ஸ்ரீதேவி 7 நாட்கள் விரதம் இருந்து அவருக்காக கோயில் பிரசாதத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது. இப்படி, நட்பு என்று மட்டுமன்றி, பரஸ்பர மரியாதையுடன் மிகுந்த அன்பான ஒரு உறவில் ரஜினியும்-ஸ்ரீதேவியும் இருந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.
நட்பில் பிளவு..?
ஸ்ரீதேவி, 1993ஆம் ஆண்டு போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே மோனா ஷோரி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர். இப்படி, ஏற்கனவே குடும்பஸ்தராக இருப்பவரை ஸ்ரீதேவி திருமணம் செய்து காெள்வது ரஜினிகாந்திற்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், இவர்கள் இருவரின் நட்பில் அப்போது பிளவு ஏற்பட்டதாக பேசப்பட்டது.
ரஜினி-ரம்பா சரச்சை..
ரம்பா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அதில், அருணாச்சலம் படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது, ஒரு முறை மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட போது, ரஜினி தன்னை முதுகில் தட்டி பயமுறுத்தியதாக கூறினார். இது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏற்கனவே ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் பகையாக இருக்கும் நிலையில், இரு தரப்பு ரசிகர்களும் ட்விட்டர் தளத்தில் சண்டையிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | ரம்பாவை பின்னால் தட்டிய ரஜினி..! ஷாக்கான நடிகை..நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ