கோவை: கோவை கே.ஜி. திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் கமல்ஹாசனுக்கு சிறப்பு அலங்கார வளைவுகள் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. திரையரங்க ஊழியர்களுக்கு நினைவு பரிசுகளை கமல்ஹாசன் வழங்கிய கமல்ஹாசன், நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது என்று கோரிக்கை விடுத்தார். ”சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்பத்தில் என்னை நீ தான் அந்த பிள்ளை என கேட்ட போது மகிழ்ச்சி அளித்தது. ஆனால் ஆரம்ப காலத்தில் நான்கு படங்கள் நடித்தும் என்னை யாரும் கண்டுக்கவில்லை. அதை மாற்றவும் உழைத்தேன். சினிமாவில் சாதித்தது எனக்காக மட்டும் என பெருமை பீத்திக்கொள்ள முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ஒடிடி காலகட்டத்தில் பழைய திரையரங்குகளை மல்டி ப்ளேக்ஸ் தியேட்டர்களாக மாற்றி இளைஞர்கள் முன் வந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய நடிகர் கமல்ஹாசன், ஒடிடி குறித்து முன்கூட்டியே சொல்லியிருந்தேன். இப்போது வந்துயிருக்கிறது. திரையரங்குளில் உணவகம் வரப்போகிறது என்றார். 


மேலும் படிக்க | காதல் கொண்டேன் வைப் ஏற்றும் நானே வருவேன் டீசர்; யூ-ட்யூபில் டிரெண்டிங்!


இது, அமெரிக்காவில் வந்துவிட்டது. உணவகமும் தொழில் தான் சினிமாவின் மவுஸ் இன்னும் குறையவில்லை என்று கூறிய நடிகர் கமல்ஹாசன், வாந்தாரை வாழ வைக்கும் தமிழகம் போன்று, சினிமாவும் 63 ஆண்டு காலமாக என்னை வாழ வைத்துள்ளது என்று திரைத்துறைக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார். 



நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது. ஒரு வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது சிறந்த திரைப்படங்கள் எடுக்க உத்வேகமாக அமையும். நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள் என்று கேட்டுக் கொண்ட நடிகர் கமல்ஹாசன், மக்கள் வாழ்த்தினால் சம்பளம் இரண்டு மடங்கு ஆகும். என்னை மட்டுமல்ல.  நன்றாக நடிக்கும் நடிகரை வாழ்த்துங்கள். எங்கள் சினிமா இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார்.


மேலும் படிக்க | விஜய் படத்தின் காபியா வெந்து தணிந்தது காடு திரைப்படம்


வட இந்தியாவில் பயப்படுகிறார்கள், தென் சினிமா பக்கம் அனைவரின் பார்வை திரும்பிவிட்டது. என் குடும்பமும் சினிமாவில் தான் இருக்கிறது. புதிதாக வரக்கூடிய நடிகர்களை உற்று கவனித்து வருகிறேன் என்றும், என்னிடம் இல்லாததை புதிய நடிகர்களிடம் இருந்து எடுத்துக் கொள்கிறேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.


எனக்கு பிடித்த ஊர் கோவை என்று கோவையை பற்றி குறிப்பிட்ட நடிகர் கமல்ஹாசன், கோவையில் விக்ரம் க்ளைமேக்ஸ் படம் எடுக்கும் போது எனக்கு கோவிட் வந்து விட்டது என்பதையும் குறிப்பிட்டார். ராஜ்கமல் நிறுவனம் 53 வது படத்தை தயாரித்து வருகிறது என்றும், குறைந்த காலக்கட்டத்தில் 100 வது திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் நினைக்கிறேன். அது பேராசை கிடையாது. பேன், ஏசி வந்தவுடனும், ஏரி கரையில் நடக்குறோம்ல்ல, அந்த மாதிரி தான் சினிமா என்று தெரிவித்தார். 


மேலும் படிக்க | பாடலாசிரியர் கபிலன் மகள் தூக்கிட்டு தற்கொலை! நடந்தது என்ன?


சீனாவில் 50 ஆயிரம் சினிமா தியேட்டர்கள் உள்ளது. அதைவிட கூட்டம் இங்கு இருக்கு சினிமா வளர அதை நாம் இங்கு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 


நடிகர் கமல்ஹாசன் பேசிய பிறகு பேசிய திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்புரமணியம், ”கோவையில் நூறாவது நாள் விழாக்கள் கொண்டாடி 15 வருடங்கள் ஆகியுள்ளது. கமல் வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. அவர் வந்தது வந்தது மகிழ்ச்சி. நூறு ஆண்டுகள் சினிமா வரலாற்றில் விக்ரம் 2 தான் ரெக்கார்டு ப்ரேக் கலெக்சன் எடுத்துள்ளது. கமல் அரசியலில் இருந்தாலும், எங்கு இருந்தாலும் சினிமா தாம் அவருடைய உயிர் மூச்சு. சினிமாவின் அடுத்தகட்ட பரிமாற்றம் வழி வகுத்தவர் கமல்ஹாசன். திரையரங்குகள் எப்போதும் அழியாது என சொல்லியவர் கமல். அதிநவீன டெக்னாலஜி  தமிழ் சினிமாவில் புகுத்தியவர் கமல்ஹாசன். உலக நாயகன் வார்த்தைக்கு 100 க்கு 200 சதவீதம் பொருத்தமானவர். திரைப்பட வர்த்தகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மூலம் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. கமல்ஹாசன் வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.


மேலும் படிக்க | தலைமுறைகள் தாண்டி என்னை ரசிக்கிறீர்கள் - கமல் ஹாசன் நெகிழ்ச்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ