'கோலமாவு கோகிலா' மற்றும் 'டாக்டர்' படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் மீது ரசிகர்கள் அதிகமாக கவனத்தை செலுத்த தொடங்கினர்.  விஜய்யுடன் இவர் கூட்டணி அமைக்கும் செய்தி வெளியானதும் இவர் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது, ஆனால் பீஸ்ட் படம் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்று கலவையான விமர்சனங்களை பெற்றது.  இதனால் நெல்சன் மீது பலருக்கும் கடும் அதிருப்தி ஏற்பட்டது.  ஏற்கனவே நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானது.  ஆனால் பீஸ்ட் படத்திற்கு கிடைத்த சில எதிர்மறையான விமர்சனங்களால் இந்த படம் நிறுத்தப்பட்டுள்ளது என்று சில செய்திகள் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | வலிமை வசூலை பாக்ஸ் ஆஃபீஸில் ஓரங்கட்டிய பீஸ்ட்


'தலைவர்169' படத்தை நெல்சன் இயக்குவாரா மாட்டாரா என்கிற குழப்பங்கள் நீடித்து வந்தது, ஆனால் இப்படத்தை நெல்சன் தான் இயக்குகிறார் என்று கூறப்படுகிறது.  பல இயக்குனர்கள் சொன்ன கதைகளில் நெல்சன் சொன்ன கதை தான் ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும், அதனால் அவர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.  தற்போது ரஜினிகாந்த ரசிகர்களுக்கு இப்படம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது, விஜயின் பீஸ்ட் படத்தில் செய்த தவறுகளை தலைவர்169-ல் நெல்சன் திருத்திக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



பலரும் இப்படத்தின் அப்டேட்டுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது.  அந்த தகவல்களின் படி, இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  'படையப்பா' படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரின் காம்போ நல்ல வரவேற்பை பெற்றது, இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் இப்படத்தில் இணைந்தால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.  மேலும் அனிருத் இசையமைப்பாளராகவும், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராகவும் பணியாற்ற போகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.



மேலும் படிக்க | விக்ரம் படத்தின் கதை இதுதானா? இணையத்தில் வெளியான தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR