வலிமை வசூலை பாக்ஸ் ஆஃபீஸில் ஓரங்கட்டிய பீஸ்ட்

பீஸ்ட் திரைப்படம் வலிமை படத்தின் வசூலை 12 நாட்களில் ஓரங்கட்டியிருக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 25, 2022, 06:39 PM IST
  • வலிமை படத்தின் வசூலை ஓரங்கட்டிய பீஸ்ட்
  • 240 கோடியை கடந்திருப்பதாக தகவல்
  • இந்த வாரம் வசூல் மேலும் உயரக்கூடும்
வலிமை வசூலை பாக்ஸ் ஆஃபீஸில் ஓரங்கட்டிய பீஸ்ட் title=

தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது. தமிழகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. விடிய விடிய காத்திருந்து முதல் ஷோவுக்கு போன ரசிகர்கள் கூட இரண்டாவது ஷோவுக்கு போகவிரும்பவில்லை என விமர்சகர்கள் கடுமையான விமர்சனத்தை பதிவு செய்தனர். அதேநேரத்தில், பாசிட்டிவான சில  விமர்சனங்களும் வந்தன. லாஜிக்கையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு படத்தை பார்த்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறினர்.

மேலும் படிக்க | ஆர்ஆர்ஆர் வெற்றிக்காக வால்வோ கார் வாங்கிய ராஜமௌலி - விலை தெரியுமா?

ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் பாக்ஸ் ஆஃபீஸ் நிலவரம், விமர்சனங்களையெல்லாம் தவுடுபொடியாக்கியுள்ளது. படம் வெளியாகி 12 நாட்களில் வலிமை படத்தின் வசூலை முழுவதுமாக முறியடித்திருப்பதாக கூறப்படுகிறது.  சரியான தொகை தொடர்பாக சில முரண்பாடான தகவல்கள் இருந்தாலும், வலிமை படத்தின் வசூலை முறியடித்துவிட்டது மட்டும் நிதர்சனமாம். இப்போது வெளியாகியிருக்கும் லேட்டஸ்ட் பாக்ஸ் ஆஃபீஸ் நிலவரப்படி, உலகளவில் 241 கோடி ரூபாய்க்கும் மேல் பீஸ்ட் படம் வசூல் வேட்டை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்துக்குப் பிறகு வெளியான திரைப்படங்கள் வரிசையில், இதுவரை வலிமை படம் முதல் இடத்தில் இருந்துள்ளது. அஜித்தின் வலிமை படம் 152 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. ஆனால், பீஸ்ட் திரைப்படம் 12 நாட்களில் மட்டும் 240 கோடியை வசூலித்தை முதல் இடத்தில் உள்ளது. 148 கோடி ரூபாய் வசூலித்த அண்ணாத்த 3வது இடத்திலும், 101 கோடி ரூபாய் வசூலித்த டாக்டர் 4வது இடத்திலும் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் முறையே மாநாடு மற்றும் கர்ணன் உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன.

இப்போதைய வசூல் நிலவரத்தைப் பொறுத்த வரை எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் விஜய்யின் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் நெருங்க்கூட முடியாது என்பது நிரூபணமாகியுள்ளதாக விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் மெச்சுகின்றனர். இந்த வார இறுதியில் இந்த தொகை மேலும் உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இன்னொரு தகவலின்படி, வலிமையின் 25 நாள் கலெக்ஷனை பீஸ்ட் 12 நாட்களிலேயே முறியடித்திருப்பதாகவும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர். 

மேலும் படிக்க | சூர்யா தயாரிப்பில் துவங்கியது சூரரை போற்று ஹிந்தி ரீமேக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News