Rashmika Mandanna First Look : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், குபேரா படத்தில் நடிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மறுநாள் வெளியாகயுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான முழுமையான விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குபேரா திரைப்படத்தின் அப்டேட் :
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், தனுஷ் (Actor Dhanush). கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என மூன்று திரையுலகிலும் நடிக்கும் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது குபேரா படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சேகர் கமூலா இயக்கியுள்ளார். இவர், தெலுங்கில் ஹிட் அடித்த ஃபிதா, லவ் ஸ்டோரி, ஹேப்பி டேஸ் உள்ளிட்ட சில ஃபீல் குட் படங்களை இயக்கியிருக்கிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. 


மேலும் படிக்க | Ajith Kumar : வாழத்தெரிந்த மனிதர் அஜித்! சமையலும் செய்வார்..பைக் டூரும் செல்வார்..வைரல் போட்டோக்கள்!


கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஹைதராபாத் , மும்பை உள்ளிட்ட நகரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மேலும் படிக்க | Shalini Ajith Kumar : மனைவியுடன் மருத்துவமனையில் அஜித்குமார்! ஷாலினிக்கு என்ன ஆச்சு?


குபேரா போஸ்டர் அப்டேட்:
இதனிடையே இந்த படத்தின் (Kubera Movie Update) அடுத்த அடுத்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டு வந்தது. மேலும் இந்தப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் நாகார்ஜூனா கேரக்டர் கிளிம்ப்ஸ் வெளியானது. இதில் கட்டு கட்டாக பணம் காணப்பட்டது. இதையடுத்து மழையில் குடை பிடித்தபடி நடந்து வரும் நாகார்ஜுனா, கீழே கிடக்கும் ஒரு ரூபாய் நோட்டை எடுத்து அந்த கட்டில் சேர்ப்பதாக இந்த கிளிம்ப்சில் காணப்பட்டது.




ராஷ்மிகா மந்தனா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:
இந்நிலையில் தற்போது தனுஷூடன் முதல் முறையாக குபேரா படத்தில் இணைந்து நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும் படிக்க | விடாமுயற்சி ஷூட்டிங் ஓவர்! அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய அஜித்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ