சென்னை அயனாவரம் சயானி பேருந்து நிறுத்தம் அருகே பரோ உபகார அறக்கட்டளையின் சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அறக்கட்டளையின் நிறுவனர் வசந்த்குமார் செயலாளர் கார்த்திக் மற்றும் V4 ஈவன்ட்ஸ் நிறுவனர் வந்தித் ஆகியோர் முன்னிலையில் சினிமா நடிகர் மற்றும் சின்னத்திரை புகழ் தாடி பாலாஜி கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மோர் மற்றும் தர்பூசணி வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினார்.  இதனைத் தொடர்ந்து  சென்னையில் பல்வேறு இடங்களில் இந்நிகழ்வு பரோஉபகாரா அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்டது. மேலும் அறக்கட்டளை சார்பாக பசு மாடுகளுக்கு உணவு, சாலையோர மக்களுக்கு தேவையான பொருட்கள், கல்விக்கு உதவி என பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிச்சைக்காரன் 3 வந்தால் என்னவாகும்? கலக்கத்தில் மக்கள்!



அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி கூறுகையில், தான் கட்டாயம் அரசியலுக்கு வருவதாகவும் தனக்கு அங்கீகாரம் கொடுக்கும் கட்சிகளோடு இணைந்து பணி ஆற்றுவதாகவும், அதே கட்சியில் புதுமையான முறையில் தனித்துவமாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். போதைப் பொருட்களை பொருத்தவரையில் அதனை உபயோகிப்பவர்கள் நினைத்தால் மட்டுமே முற்றிலும் தடுக்க முடியும் என்றும் கூறினார்.  மாணவர்களுக்கு பன்னிரண்டாவது முடித்த மாணவ மாணவியரை அடுத்த கட்டமாக கல்லூரிக்கு அனுப்புவதற்காக பெற்றோர்கள் கடும் வெயிலிலும் ஒவ்வொரு கல்லூரிகளாக அலைந்து வருவதை மாணவர்கள் கருத்தில் கொண்டு நன்கு படித்து வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.


சமீபத்தில் பிளஸ் 2 பொது தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இந்த மாணவிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். அந்த வகையில், தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி லக்ஷயா ஸ்ரீயை தாடி பாலாஜி அரக்கோணத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து பாராட்டினார்.  மேலும் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி, லக்ஷயா ஸ்ரீயை நேரில் சந்தித்து வாழ்த்துகிறேன் என்று கூறினேன். அதன்படி நேரில் சந்தித்து வாழ்த்திவிட்டேன். அவரது கல்விக்கான சிறிய உதவிகளை நான் செய்கிறேன் என்று கூறியுள்ளேன். தமிழக அரசும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் கல்வித்துறையில் மாணவ, மாணவிகளுக்காக பல நலத்திட்ட உதவிகளை கொண்டு வருகிறார்கள். இந்த வாய்ப்பினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் நான் அரசியலுக்கு வருவேன், வந்தால் நல்ல விஷயங்கள் பல செய்வேன். தனியாக கட்சி ஆரம்பிக்கும் ஆசை இல்லை. எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் நான் வேலை செய்ய தயாராகவுள்ளேன் என்று கூறினார்.


மேலும் படிக்க | தமிழ் சினிமாவின் 'நீங்காத பிறை' - பாலு மகேந்திராவின் பிறந்தநாள் இன்று


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ