பூண்டை தினமும் உணவில் சேர்த்தால் இந்த நோய்கள் உங்களை அண்டாது

Benefits Of Eating Garlic In Summer: பூண்டு பல நூற்றாண்டுகளாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. பூண்டு பல அபாரமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஆகையால் அதை அவ்வப்போது உணவில் சேர்ப்பது மிக நல்லதாகும். 

பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி பண்புகள் உள்ளன. இதில் அல்லிசின் என்ற சிறப்பு தனிமம் உள்ளது, இது பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டது. பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல தாதுக்கள் பூண்டில் ஏராளமாக காணப்படுகின்றன. பூண்டில் வைட்டமின் சி, கே, நியாசின், தியாமின் மற்றும் ஃபோலேட் ஆகியவையும் உள்ளன. பூண்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், பல வித உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

 

1 /6

இதய நோய்: இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை பூண்டு குறைக்கும். உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக பூண்டை சாப்பிட வேண்டும். இது தவிர, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் இருக்க இதை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.

2 /6

செரிமானத்தில் ஏற்படும் இடையூறுகள்: உங்கள் உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வதன் மூலம், செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். பச்சையாக பூண்டு சாப்பிடுவது வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்க உதவுகிறது. பூண்டு குடலின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.

3 /6

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி: உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் அல்லது நீங்கள் அடிக்கடி சளி, இருமல் மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டால், பூண்டை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பினால், பூண்டை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம்.

4 /6

கெட்ட கொலஸ்ட்ரால்: பூண்டை உட்கொள்வது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

5 /6

தோல் பிரச்சனைகள்: பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, சருமத்தை பளபளக்க உதவுகிறது. பருக்கள் மீது பூண்டை தடவினால் அவை சரியாகும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இருப்பினும், இதை செய்வதற்கு முன், ஒரு மருத்துவரை அணுகவும்.

6 /6

புற்றுநோய்: பூண்டு சாப்பிடுவது புற்றுநோய் போன்ற கொடிய நோய்களைத் தவிர்க்க உதவுகிறது என்று பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், பூண்டில் உள்ள பல உயிர்வேதியியல் மூலக்கூறுகள் புற்றுநோய் செல்களைக் கொல்லவும், அவை பரவாமல் தடுக்கவும் உதவுகின்றன.