பிரபல இந்தி நடிகை மூன் மூன் சென்னின் மகள் இவர். தொடர்ந்து குட்லக், அரசாட்சி உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்தார்.ரியா சென் தமிழில் பாரதிராஜா இயக்கிய ’தாஜ்மஹால்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரியா சென்.பெங்காலி படங்களில் நடித்து வந்த ரியா, இந்தி நடிகர்கள் ஜான் ஆபிரகாம், அஷ்மித் பட்டேல் ஆகியோரை காதலித்து வந்தார். பின்னர் அவர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், சிவம் திவாரி என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார் ரியா. இவர்கள் திருமணம் புனேவின் நேற்று ரகசியமாக நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். 


இந்த திருமணம் பற்றி ரியாவோ, அவரது குடும்பத்தினரோ எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், ரியா சென் அவரது இன்ஸ்டாகிராமில் சிவம் திவாரியுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரியாவின் சகோதரி ரைமா சென்னும் இந்தியில் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.