பட்ஜெட்டைவிட கதைதான் முக்கியம்... பெரிய பட்ஜெட் படங்களை சீண்டிய ஆர்.கே. சுரேஷ்?
1000 கோடி ரூபாயில் படம் எடுத்தால் அது தோல்வியடைந்துவிடுமென நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் சமீப காலங்களில் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுப்பது அதிகரித்துள்ளது. அப்படி தயாரிக்கப்படும் படங்களுக்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும், விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு இருப்பதில்லை.
சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படமும் ஒரு தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், பட்ஜெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கதைக்கு கொடுக்க வேண்டுமெனவும் பேச்சு எழுந்துள்ளது.
இந்நிலையில் கன்னீத்தீவு படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ், “ ரூ.1000 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பது சரியான வழி கிடையாது. இப்படியே சென்றால் இதுபோன்ற படங்கள் விரைவில் தோல்வியடைந்துவிடும். படத்திற்கு பட்ஜெட்டைவிட கதைதான் முக்கியம்.
தயாரிப்பாளர் கே.ராஜன் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். இப்போது மஹா மற்றும் மாமனிதன் படங்களை வெளியிடுகிறேன். ஆகையால், திரைப்படங்களை என்னிடம் தாருங்கள் நான் வெளியிட்டு தருகிறேன்.
மேலும் படிக்க | இசையமைப்பாளர் டி.இமானுக்கு டும் டும் டும்... பொண்ணு யாரு தெரியுமா!
மற்ற மாநில மொழி படங்கள் 30% மட்டும்தான் வர வேண்டும். பான் இந்தியா படம் என்கிறார்கள். அப்போது அதை ஓடிடியில் வெளியிடுங்கள். திரையரங்கம் நிலைக்க வேண்டுமென்றால் சிறிய படங்கள் அதிகம் திரையரங்கில் வெளியிட வேண்டும். புதுமுக இயக்குநர்கள் கதைகளை மையப்படுத்தி படம் எடுங்கள். இது எனது வேண்டுகோள்” என்றார்.
மேலும் படிக்க | அன்றே கணித்த உதயநிதி- சிவகார்த்திகேயனின் ‘டான்’ வசூல் எவ்வளவு?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR