Indraja Shankar Wedding Latest News In Tamil : தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வரும் ரோபாே சங்கரின் செல்ல மகள், இந்திரஜா சங்கர். விஜய் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘பிகில்’ படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். இதையடுத்து, அவருக்கு தற்போது திருமணம் ஆகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திரஜா சங்கர்:


காமெடி நிகழ்ச்சிகள் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமான ரோபோ சங்கர் (Robo Shankar Daughter Wedding). கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவிற்குள்ளும் துணை கதாப்பாத்திரங்கள் மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். தனுஷ், அஜித், சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், ஆர்.ஜே.பாலாஜி என பல நடிகர்களின் படங்களில் நடித்த இவர், சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் இருந்து எடையை குறைத்தார். ரோபாே சங்கர் மட்டுமன்றி, அவரது மனைவி பிரியங்கா சங்கர், மகள் இந்திரஜா சங்கர் என அனைவருமே தற்போது கோலிவுட் உலகில் மக்களுக்கு முகம் தெரிந்த கலைஞர்களாக இருக்கின்றனர். 


இந்திரஜா சங்கர், விஜய்யின் பிகில் படத்தில் ‘பாண்டியம்மா’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த படத்தில் அவர் உருவ கேலிக்கு எதிராக எமோஷனலாக பேசும் டைலாக் பிரபலமாகி இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் அதிதி ஷங்கருக்கு தோழியாக நடித்திருப்பார். 


தாய் மாமனுடன் திருமணம்..


இந்திரஜா சங்கருக்கு, நேற்று (மார்ச் 24, 2024) மதுரையில் திருமணம் நடைப்பெற்றுள்ளது. தனது சொந்த தாய் மாமனான கார்த்திக் என்பவரையே, இந்திரஜா திருமணம் செய்து கொண்டிருக்கிறார் (Indraja Shankar Husband). இந்திரஜா-கார்த்திக்கிற்கு சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்ற நிலையில், தற்போது இவர்களின் திருமண வைபாேகம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. நடிகர்கள் சூரி, போஸ் வெங்கட், அம்ரிதா உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திரஜாவின் திருமண விழாவில் சில பிரபலங்கள் கலந்து கொண்டனர். 


மேலும் படிக்க | மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள டாப் 5 கிரைம் திரில்லர் படங்கள்!


மண மக்களுக்கு சூரி கொடுத்த அட்வைஸ்..


இந்திரஜாவின் திருமண விழாவை ஒரு பிரபல ஊடகம், முழுவதுமாக கவர் செய்தது. இந்த நிலையில், அவர்கள் திருமண விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களை பேட்டி எடுத்தனர். சில பிரபலங்கள் மேடையில் மண மக்களை வாழ்த்தினர். அப்படி வாழ்த்தியவர்களுள், நடிகர் சூரியும் ஒருவர். அவர் புதிதாக திருமணம் ஆன இந்திரஜா குறித்தும், நடிகர் ரோபாே சங்கர் குறித்தும் பேசினார். 


ரோபாே சங்கரையும் அவரது குடும்பத்தினரையும் தனக்கு 25 ஆண்டுகளாக தெரியும் என, நடிகர் சூரி கூறினார். மேலும், ரோபோ சங்கரின் தங்கப்பிள்ளை இந்திரஜா தனக்கும் பிள்ளை மாதிரி என்று கூறினார். மேலும், திருமணம் ஆன பின்பு உங்களுக்குள் சண்டை வந்தால், கண்டிப்பாக 3வது மனிதனை அதற்குள் நுழைத்து விட வேண்டாம் என்று இந்திரஜாவிற்கும் அவரது கணவர் கார்த்திக்கிற்கும் சூரி அட்வைஸ் செய்தார். 


வெயிட்டான மொய்..


தடபுடலாக நடைப்பெற்ற இந்திரஜாவின் திருமண விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் பல்வேறு பரிசு பொருட்களையும் மொய் பணத்தையும் கொடுத்தனர். அந்த வகையில், இந்திரஜாவிற்கு வெயிட்டாக ஒரு அமவுண்டை மொய்யாக கொடுத்திருக்கிறார் நடிகர் சூரி. 


மேலும் படிக்க | மீண்டும் சீரியலில் அதிரடியாக களமிறங்கும் பிக்பாஸ் புகழ் வினுஷா தேவி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ