மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள டாப் 5 கிரைம் திரில்லர் படங்கள்!

Top 5 Crime Thriller Movies: தற்போது தமிழ் ரசிகர்கள் அதிகம் மலையாள சினிமாவை தேடி தேடி பார்த்து வருகின்றனர். குறிப்பாக கிரைம் திரில்லர் படங்களை விரும்பி பார்க்கின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Mar 25, 2024, 07:22 AM IST
  • கிரைம் திரில்லரை விரும்பி பார்க்கும் ரசிகர்கள்.
  • குறிப்பாக மலையாள படங்கள் அதிகம் விரும்பப்படுகின்றன.
  • ஓடிடியில் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.
மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள டாப் 5 கிரைம் திரில்லர் படங்கள்! title=

Best Malayalam Crime Thrillers: தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் இருந்து பல்வேறு நல்ல திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி உள்ளது.  பாலிவுட் படங்களுமே இங்கு இருந்து தான் ரீமேக் செய்யப்படுகின்றன. பல்வேறு தென்னிந்திய படங்கள் திரையரங்கு மற்றும் ஓடிடிகளில் ஹிட் அடித்துள்ளது. கொரோனா லாக்டவுனிற்கு பிறகு மற்ற மொழி படங்கள் தமிழகத்தில் வெளியாகி வெற்றி பெற்று வருகிறது. குறிப்பாக மலையாளத்தில் வெளியாகும் கிரைம் திரில்லர் படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளன.  பலரும் மலையாள படங்களை தேடி தேடி பார்க்க தொடங்கி உள்ளனர்.  ஓடிடி தளங்களும் தற்போது தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர். மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள சில கிரைம் திரில்லர் படங்களை பற்றி பார்ப்போம்.

மேலும் படிக்க | ஹாட் ஸ்பாட் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

ஒரு சிபிஐ டைரி குறிப்பு (Oru CBI Diary Kurippu)

ஒரு சிபிஐ டைரி குறிப்பு 1988ம் ஆண்டு வெளியான மலையாள திரில்லர் படம் ஆகும்.  மம்முட்டி சேதுராம ஐயராக நடிக்கும் சிபிஐ திரைப்படத் தொடரின் முதல் பாகம் இது ஆகும்.  மேலும் சுரேஷ் கோபி, ஜகதி ஸ்ரீகுமார், முகேஷ் மற்றும் சுகுமாரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இலவசமாக ஒளிபரப்பாகிறது. எஸ்.என்.சுவாமி கதை எழுத கே. மது இயக்கத்தில் சுனிதா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

கண்ணூர் ஸ்குவாட் (Kannur Squad)

கடந்த 2023ம் ஆண்டு வெளியான மலையாள திரில்லர் படம் கண்ணூர் ஸ்க்வாட். இந்த படத்தின் மூலம் ராபி வர்கீஸ் ராஜ் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். மேலும் முகமது ஷஃபி மற்றும் ரோனி டேவிட் ராஜ் ஆகியோர் படத்தின் கதை எழுதி உள்ளனர்.  இப்படத்தில் மம்முட்டியுடன் ரோனி டேவிட் ராஜ், அஸீஸ் நெடுமங்காட், ஷபரீஷ் வர்மா, கிஷோர் மற்றும் விஜயராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டு உருவாகி உள்ளது.  இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. 

அஞ்சம் பத்திர (Anjaam Pathiraa)

குஞ்சாக்கோ போபன் மற்றும் ஷரஃப் யு தீன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் அஞ்சம் பத்திரா. ஒரு தொடர் கொலைகாரனைப் பிடிக்கும் குற்றவியல் நிபுணரைச் சுற்றி படம் நகர்கிறது. கடந்த 2020ம் ஆண்டு மலையாளத்தில் படம் வெளியானது. மிதுன் மானுவல் தாமஸ் எழுதி இயக்க இப்படத்தில் ஸ்ரீநாத் பாசி, உன்னிமய பிரசாத், ஜினு ஜோசப், அபிராம் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார், ஷைஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் படம் ஆஹா மற்றும் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகிறது.

ரோர்சாச் (Rorschach)

நிசாம் பஷீர் இயக்கத்தில் மம்முட்டி, ஷராபுதீன், ஜெகதீஷ், கிரேஸ் ஆண்டனி, பிந்து பணிக்கர், கோட்டயம் நசீர், சஞ்சு சிவராம், ஆசிப் அலி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ரோர்சாக். 2022ம் ஆண்டு நியோ-நோயர் உளவியல் த்ரில்லர் வடிவில் படம் உருவாகி இருந்தது. இப்படத்திற்கு மிதுன் முகுந்தன் இசையமைத்துள்ளார், நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.

த்ரிஷ்யம் (Drishyam)

ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய த்ரிஷ்யம் படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது.  கிரைம் திரில்லர் வடிவில் உருவான இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.  இப்படத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், கலாபவன் ஷாஜோன், ஆஷா சரத், சித்திக், ரோஷன் பஷீர் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஐஜி கீதா பிரபாகரின் மகன் வருண் பிரபாகர் காணாமல் போனதும் சந்தேகத்திற்குரிய ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தினரின் போராட்டத்தை படம் பேசுகிறது.  இதன் தொடர்ச்சியான 'த்ரிஷ்யம் 2' 2021ல் வெளியானது. இந்தத் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்பட துவக்க விழா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News