‘RRR’ க்கு இப்படியொரு அரசு சலுகையா?!
அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ஆ.ஆர்.ஆர் வருகிற 25ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
பாகுபலி வாயிலாகக் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜமெளலி ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் எனும் படத்தை இயக்கியுள்ளார். அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப்படம் வருகிற 25ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தியா மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளில் இப்படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்த இரண்டு வீரர்களை பற்றிய கதை எனக் கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளிலும் இது ரிலீஸ் செய்யப்படவுள்ளது. பல மாதங்களுக்கு முன்பே இப்படம் தயார் ஆன நிலையில் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இதன் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் வருகிற 25ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இதனிடையே ஆந்திர மாநில அரசு அண்மையில் சினிமா டிக்கட் கட்டணத்தை வரையரை செய்து வெளிட்டது. அதன்படி, தனித் தியேட்டர்களில் அதிகபட்சம் 120 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல 100 கோடி பட்ஜெட்டுக்கு மேல் தயாராகும் திரைப்படங்களுக்கான கட்டணத்தை படம் வெளியான ஒரு வாரத்துக்கு தியேட்டர் உரிமையாளர்களே நிர்ணயித்து கொள்ளலாம் எனவும் சலுகை அறிவிக்கப்பட்டது. அதே நேரம் குறைந்தபட்சம் அந்தப் படங்களின் 30% படப்பிடிப்பு ஆந்திராவில் நடத்தப்பட்டிருக்கவேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நடைமுறைகள் யாவும் இனிமேல் தயாராகும் படங்களுக்கே பொருந்தும் எனவும் அம்மாநில அரசு திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. ஆனால் ஆர்.ஆர்.ஆர் படமோ இந்த ஆணைக்கு முன்பாகவே எடுத்துமுடிக்கப்பட்டது. அதனால் புதிய சலுகைகளைப் பெற முடியாத நிலை உருவானது.
மேலும் படிக்க | உக்ரைனில் 'RRR' டீம்: ராஜமெளலி புதிய தகவல்!
இந்த நிலையில், ஆர்.ஆர்.ஆர் படக்குழு, ஆந்திர முதலமைச்சரைச் சந்தித்து மனு அளித்துள்ளது. அந்த மனுவில், “ஆர்ஆர்ஆர் படம் இயக்குநர் மற்றும் நடிகர்களின் சம்பளம் நீங்கலாக 336 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 80% படப்பிடிப்புகள் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படமாக்கப்பட்டுள்ளது. இது தெலுங்கு மண்ணின் கெளரவமிக்க இரண்டு வீரர்களைப் பற்றிய படம். எனவே இந்த படத்திற்கு தனிச் சலுகை தரவேண்டும்” என கூறியிருந்தது.
இதையடுத்து படக்குழுவின் கோரிக்கையை ஏற்ற ஆந்திர அரசு, ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் 10 நாட்களுக்கான தியேட்டர் கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்களே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
மேலும் படிக்க | எஸ்.கேவுக்கு வில்லனாக மாறிய பிரேம்ஜி! - என்னாச்சு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR