ராக்கி படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இவர் தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் தனது முதல் படமாக சாணிக்காயிதம் படத்தை இயக்கினார். இப்படத்தின் வெளியீடு தாமதமானதால் ராக்கி படம் முதலில் வெளியானது. சாணிக்காயிதம் படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்திருக்கிறார். செல்வராகவன் நடித்த முதல் படமும் இதுதான்.



அவருடன் முதன்மை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்தாலும் வெளியீடு தேதியை மட்டும் படக்குழு அறிவிக்காமல் இருந்துவந்தது.


 



இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசரில், “பழி வாங்குறதுனா என்னனு தெரியுமா” என கீர்த்தி சுரேஷ் பேசும் வசனங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.


மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் களமிறங்க இருக்கும் புதிய வாரிசு நடிகர்


மேலும், படமானது மே 6ஆம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR