நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் மன வலியை உணர்கிறேன்- சாய் பல்லவி
நீட் தேர்வால் தற்கொலை செய்துகொள்வது வேதனை அளிக்கிறது என நடிகை சாய் பல்லவி கருத்து தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு பயத்தால் மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மருத்துவ படிப்பு படித்துள்ள நடிகை சாய் பல்லவி, சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது.,
மருத்துவம் என்பது ஒரு கடல் போன்ற படிப்பு. இதில் தேர்வின்போது எதிலிருந்து கேள்விகள் வரும் என்று சொல்ல முடியாது. அதனால் மனதளவில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். மாணவர்களுடன் பேசி நம்பிக்கையை ஊட்ட வேண்டும். என் குடும்பத்திலும் நீட் (NEET Exam) தற்கொலை சோகம் நிகழ்ந்திருக்கிறது.
ALSO READ | தற்கொலை வேண்டாம்! உங்கள் சகோதரனாக கேட்கிறேன்: முதலமைச்சர் உருக்கமான கடிதம்
மதிப்பெண் குறைந்து விட்டதால் தற்கொலை செய்து கொண்டு விட்டார். இத்தனைக்கும் அவர் மோசமான மதிப்பெண் எடுக்க வில்லை. ஆனால் அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விட்டது. அதனால் தற்கொலை செய்து கொண்டு விட்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், தற்கொலை செய்து கொள்வது உங்கள் குடும்பத்தை ஏமாற்றும் செயல் ஆகிவிடுகிறது.
இந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தான் அதன் வலி தெரியும் . அந்த தேர்வை அவர்கள் எந்த நிலையில் இருந்து எழுதினார்கள் என்று பார்க்க வேண்டும். பெற்றோர்களும் நண்பர்களும் தான் மாணவர்களுடன் பேசி நம்பிக்கையை ஊட்ட வேண்டும். மாணவர்கள் இவ்வளவு இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது.
பள்ளியில் நான் படிப்பது எதுவும் நினைவில் இல்லை கல்லூரியில் நடித்த படங்கள் மட்டுமே நினைவில் இருக்கின்றன. மாணவர்களின் வலியை உணர்கிறேன். நான் எப்போதும் அவர்கள் பக்கம் தான் என்று அவர் கூறியுள்ளார்.
ALSO READ | NEET vs Counseling: நீட் எழுதிய மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் கவுன்சிலிங்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR