தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ள பிரபாஸ், சமீபத்தில் நடித்திருந்த படம், சலார் (Salaar: Part 1 – Ceasefire). பான் இந்திய அளவில் வெளியான இந்த படம் தமிழகத்தில் மிகவும் குறைவான வசூலையே பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சலார் திரைப்படம்..


ரிலீஸாவதற்கு முன்பே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் தூண்டிய படம், சலார். கே.ஜி.எஃப் படத்தை படத்தை இயக்கி புகழ் பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீலின் படம் இது  என்பதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. அது மட்டுமன்றி, இப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் என பலர் பிரபாஸ் (Prabhas) உடன் சேர்ந்து நடித்திருந்தனர். 


ரசிகர்கள் எதிர்பார்த்தை விட, படத்தில் ஆக்ஷன் காட்சிகளும் கிராஃபிக்ஸ் காட்சிகளும் அதிகளவில் இருந்தன. படம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. 


மேலும் படிக்க | Vijayakanth: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் இந்த ஆசை!


தமிழகத்தில் தோல்வி..


பிரபாஸ் படம் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு ஏனோ பெரிதாக ஈர்ப்பு ஏதும் ஏற்படுவதில்லை. பாகுபலி படத்தை தவிர, அவரது வேறு எந்த படமும் தமிழகத்தில் பெரிதாக ஓடவில்லை. ஆனால் சலார் படத்தின் இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து, அவருக்காக தியேட்டருக்கு சென்றவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியேறினர். காரணம், படத்தில் மிகைப்படுத்தப்பட்ட சண்டை காட்சிகளும், ஓவராக பில்ட்-அப் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. அது மட்டுமன்றி, படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக இருப்பர் என எதிர்பார்க்கப்பட்ட சிலர் கடைசியில் ‘டம்மி பாவா’வாக மாறிவிட்டனர். தமிழகத்தை பொறுத்தவரை, சலார் திரைப்படம் இதுவரை 10 கோடியை கூட தாண்டவில்லை என கூறப்படுகிறது. இதனால், பிரபாஸை பிடித்த தமிழ் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். 


தோல்விக்கான காரணம் என்ன? 


முன்னர், ஹீரோவிற்காக படங்களை சென்று பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது படத்தின் கதைகளுக்காக படத்தை பார்த்து வருகின்றனர். அது மட்டுமன்றி, பிரபாஸை பெரும்பாலான தமிழக மக்களுக்கு பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், தமிழ் படங்களே சரியான கதையுடன் இல்லை என்றால் ஓடாத இந்த சமயத்தில், பில்ட்-அப்பை மட்டுமே  நம்பி எடுக்கப்பட்டிருக்கும் சலார் படம் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவது சாத்தியமற்றது என கூறப்படுகிறது. படத்தில் நிறைய வெட்டு குத்து காட்சிகள் இருப்பதும் ரசிகர்கள் படத்தை ஏற்காமல் போனதற்கு காரணமாக கூறப்படுகிறது. 


பிற மாநிலங்களில் ஹிட்..


சுமார் 450 கோடி செலவில் எடுக்கப்பட்ட சலார் திரைப்படம் ((Salaar Budget), மூன்று பாகங்களாக தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம், இதுவரை உலகளவில் ரூ. 650 கோடி வசூலை தாண்டியுள்ளதாம் ((Salaar World Wide collection). நிசாம் மற்றும் கேரள மாநிலத்தில் படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. வட இந்தியா மற்றும் பிற நாடுகளில் ஓரளவிற்கு வசூலை குவித்துள்ள இப்படம், ஆந்திராவில் ஹிட் அடிப்பது சந்தேகம்தான். தமிழகத்தில் தோல்வியடைந்துள்ள இப்படம், கர்நாடகாவில் ஹிட் அடித்துள்ளது. அனைத்து ரசிகர்களாலும் படத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் வெகுஜன மக்களை இப்படம் ஈர்த்துள்ளது. 


மேலும் படிக்க | அமலா பால் அம்மாவாக போறாங்க..ரசிகர்கள் மகிழ்ச்சி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ