இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்துள்ள படம் ‘கே.ஜி.எஃப் -2’. பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இதன் முதல் பாகமான‘கே.ஜி.எஃப்’, இந்திய அளவில் பேசப்பட்டது. அத்துடன், கன்னட சினிமாவுக்கு இந்திய அளவிலான புதிய வியாபார வாசலையும் அது திறந்துவைத்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் இதை தயாரித்திருக்கிறார்.
இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடவுள்ளார். யஷ்ஷுடன் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ,சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஈஸ்வரி ராவ், , ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் கே.ஜி.எஃப் -2 படத்திற்கு ரவி பர்சூர் இசையமைத்திருக்கிறார்.
முன்னதாக வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இதன் ட்ரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. ரசிகர்களைக் கவரும் விதமாக மிரட்டலாக ட்ரெய்லர் கட் செய்யப்பட்டுள்ளதாகவும் இது இணையத்தை ஸ்தம்பிக்கவைக்கும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக படத்தின் முக்கியமான பஞ்ச் டயலாக் ஏதேனும் இந்த ட்ரெய்லரில் இடம்பெறக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ டீம் எடுத்த புது முடிவு- ரசிகர்கள் அப்செட்!
விஜய் நடித்துள்ள பீஸ்ட் மற்றும் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 ஆகிய இரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளன. தென் இந்தியப் படங்களான இரு படங்களுக்கும் ஒரே நேரத்தில் வெளியாவதால் இரு படங்களுக்குமான இந்திய அளவிலான வரவேற்பு எப்படி இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் நடித்துள்ள பீஸ்ட் டீசர் வருகிற 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் படக்குழு அதை இன்னும் உறுதி செய்யாதது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR