தமிழக மக்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த மாதம் டிசம்பர் 28ம் தேதி உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில வருடங்களாக கட்சி, பட வேலைகள் என அனைத்தில் இருந்தும் ஒதுங்கி இருந்தார் விஜயகாந்த். ரசிகர்களை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார்.
விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக சில படங்களில் நடித்து உள்ளார். இரண்டாவது மகன் கட்சி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சசிகுமார் இயக்கத்தில் உருவாகும் குற்றப்பரம்பரை வெப் சீரிஸில் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக வேலைகள் நடைபெற்று கொண்டு இருக்கும் போதே உயிரிழந்துள்ளார் விஜயகாந்த்.
தற்போது சண்முகபாண்டியன் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக குற்றப்பரம்பரை வெப் சீரிஸில் நடிக்க உள்ளார்.