பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் நடிப்பில் சமீபத்திய வெளியாகி உள்ள 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படம் ரம்ஸான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.  அதிலும் பெரும்பாலோர் சுத்தமாக படம் எடுபடவில்லை என்று கூறியுள்ளனர்.  சல்மான் ரசிகர்களைத் தவிர, எல்லா விமர்சகர்களும் படத்தை ஒரு பயங்கரமான மற்றும் தாங்க முடியாத அனுபவம் என்று அழைத்தனர்.  இந்த படத்தை பற்றி பல விமர்சனங்கள் வந்த போதிலும், ஒரு குறிப்பிட்ட விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது, அதில் ஒரு நபர் துப்பாக்கி முனையில் பிடிபட்டாலும் 'கிசி கா பாய் கிசி கி ஜான்' பார்க்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிரியங்கா மோகனுக்கு செம்ம அதிர்ஷ்டம்.. பவர் ஸ்டாருக்கு ஜோடியாகிறாரா?



தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், விரக்தியில் இருக்கும் விமர்சகர் ஒருவர் படம் தொடங்கிய 40 நிமிடங்களில் தன்னால் உட்கார முடியாததால் படத்தை விட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளார்.  "கடவுளே, என்னையும் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் மற்றவர்களையும் காப்பாற்றுங்கள். ஃபர்ஹாத் சம்ஜி ஹேரா பெரி 3 படத்தையும் இயக்குகிறார். அதன் முடிவை கற்பனை செய்து பாருங்கள். படம் பரிதாபமாக இருக்கிறது! தயவுசெய்து துப்பாக்கி முனையில் கூட பார்க்க வேண்டாம்," என்று அந்த நபர் கூறியுள்ளார். 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படம் மிகவும் மோசமான ஒரு படம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



சல்மான் தனது ரசிகர்களுக்கு ஈத் பண்டிகையை முன்னிட்டு பண்டிகை பரிசாக 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படத்தை வெளியிட்டார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, வெங்கடேஷ் டக்குபதி, ஜெகபதி பாபு, ஷெஹ்னாஸ் கில், ராகவ் ஜூயல், பாலக் திவாரி, வினாலி பட்நாகர், ஜாஸ்ஸி கில், சித்தார்த் நிகம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  ஃபர்ஹாத் சம்ஜி இயக்கிய 'கிசி கா பாய் கிசி கி ஜான்' திரைப்படம் முதல் நாளில் சுமார் 20 கோடி ரூபாய் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த படம் 2014ம் ஆண்டு தமிழில் அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வீரம் படத்தின் ரீமேக் ஆகும்.  சமீபத்தில் வெளியான கைதி 2 படத்திற்கு மிகவும் மோசமான விமர்சனங்கள் வந்ததை அடுத்து இந்த படத்திற்கும் மோசமான விமர்சனங்கள் வந்துள்ளது.


மேலும் படிக்க | Dasara OTT: ரூ. 110 கோடி வசூல் செய்த தசரா... ஓடிடியில் எப்போது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ