தமிழில் களமிறங்கும் சல்மான் கானின் ’டைகர் 3’: தீபாவளி சரவெடி ரெடி
சல்மான் கான், காத்ரீனா கைஃப் நடித்திருக்கும் டைகர் 3 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சல்மான் கான் மற்றும் காத்ரீனா கைஃப் நடித்துள்ள டைகர் 3 படத்தின் வெளியீட்டு தேதியை மாஸாக அறிவித்துள்ளார் சல்மான் கான். இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. பாலிவுட் நட்சத்திரமான அவர், இந்த அறிவிப்பை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டைகர் 3 படத்தை பேண்ட் பாஜா பாராத் இயக்குனர் மனீஷ் ஷர்மா இயக்கியுள்ளார். இந்த படத்தின் சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், இந்தியை தவிர தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் டைகர் 3 வெளியிடப்படும் என சல்மான்கான் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ரூ.1000 கோடி சம்பளமா? சும்மா கிளப்பிவிடாதீங்கய்யா - சல்மான் கான்
சல்மான் கான் அறிவிப்பு
இது தொடர்பாக சல்மான் கான் எழுதியிருக்கும் பதிவில், "டைகர் 3-க்கு புதிய தேதி இதோ...தீபாவளி 2023-ல் திரையரங்குகளில் காணலாம். #YRF50 உடன் #Tiger3 -ஐ கொண்டாடுங்கள்" என எழுதியுள்ளார். டைகர் 3 திரைப்படம் ஏற்கனவே ஈகை திருநாள் பண்டிகையின் போது வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தேதி மாற்றப்பட்டு, தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை காத்ரீனா கைப்பும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைகர் 3 வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார்.
சல்மான் - காத்ரீனா படங்கள்
ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கும் கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் சல்மான் கான் நடிக்கிறார். இப்படத்தில் வெங்கடேஷ் டக்குபதி, பூஜா ஹெக்டே மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ‘கபி ஈத் கபி தீபாவளி’ என்று முன்பு பெயரிடப்பட்டது. இது 30 டிசம்பர் 2022 அன்று திரையரங்குகளில் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. காத்ரீனா ‘போன் பூட்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திலும் நடித்திருக்கிறார்.
மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் முதல் எலிமினேஷன் இவர்களில் யார்? லிஸ்ட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ