மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக மாறிவிட்டார் சிம்பு.  கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் சிம்புவிற்கு பல கெட்ட பெயர்கள் கிடைத்தது.  சரியாக ஷூட்டிங் வரமாட்டார்,  இயக்குனர்களுடன் ஒத்துழைப்பது இல்லை போன்ற பல குற்றசாட்டுகள் சிம்பு மீது எழுந்தது.  மேலும், உடல் எடையில் கவனம் செலுத்தாமல் சிம்பு மிகவும் குண்டாக காணப்பட்டார்.  அதே கெட்டப்பில் அச்சம் என்பது மடமையடா, வந்தா ராஜாவாதான் வருவேன், செக்க சிவந்த வானம் போன்ற படத்தில் நடித்து இருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | கதிர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்


கொரோனா லாக்டவுனில் உடல் எடையை குறைக்க தீவிர முயற்சியில் இறங்கி இருந்தார் சிம்பு.  இதற்காக கேரளா சென்று பல நாட்கள் தங்கி இருந்து உடல் எடையை குறைக்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்.  பின்பு ஒருவழியாக பழைய சிம்புவாய் திரும்பி குறைந்த நாட்களில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்தார்.  அதனை தொடர்ந்து வெளியான மாநாடு படம் கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் அதிக வசூலை பெற்று இருந்தது.  இந்த படத்திற்கு பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கவுதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வந்தார்.  மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.  



வரும் மே 6ம் தேதி இந்த படத்தில் இருந்து ஏஆர் ரகுமான் இசையில் முதல் பாடல் வெளியாக உள்ளது.  இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸை வாங்கி உள்ள திங்க் மியூசிக் நிறுவனம் வெந்து தணிந்தது காடு படத்தின் ஒரு பதிவில் சமந்தாவை டேக் செய்துள்ளது.  பொதுவாக படத்திற்கான விளம்பரங்களில் போது படத்தில் நடித்தவர்களை மட்டுமே டேக் செய்வார்கள்.  ஆனால், இந்த படத்தில் ஏன் சமந்தாவை டேக் செய்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.  ஒருவேளை சமந்தா இந்த படத்தில் நடித்து இருப்பாரோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.  இதற்கு முன் கவுதம் சிம்பு கூட்டணியில் உருவான விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சமந்தா சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.  


 




இருப்பினும் வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானியை டேக் செய்வதற்கு பதிலாக மாற்றி சமந்தாவை டேக் செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  விரைவில் இது குறித்து தகவல்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து இருக்கும் சமந்தா சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.  


மேலும் படிக்க | தீபாவளிக்கு வெளியாகிறது அயலான்?... உற்சாகத்தில் ரசிகர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR