தீபாவளிக்கு வெளியாகிறது அயலான்?... உற்சாகத்தில் ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான் படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 28, 2022, 05:59 PM IST
  • தீபாவளிக்கு வெளியாகும் அயலான்
  • அயலான் ரிலீஸ் உறுதி
  • ஏலியன்களை வைத்து உருவாக்கப்பட்ட அயலான்
தீபாவளிக்கு வெளியாகிறது அயலான்?... உற்சாகத்தில் ரசிகர்கள் title=

இன்று நேற்று நாளை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். டைம் ட்ராவல் களத்தை வைத்து அவர் அமைத்த திரைக்கதையால் படம் பெரிய வெற்றி பெற்றது.

இதனையடுத்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் படத்தை தொடங்கினார். இந்தியாவிலேயே ஏலியன்களை கதைக்களமாக வைத்து முதல்முதலாக உருவாக்கப்பட்ட திரைப்படம் இது என்பதால் பலரது எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது இருக்கிறது.

Ayalaan

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும் இஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | குழந்தைகள் டீசரை பார்க்க வேண்டாம் - பயம் காட்டும் பிசாசு

கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் ஷூட்டிங் நடந்தது. இடையில் கொரோனா லாக் டவுன் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டன. சமீபத்தில் மீண்டும் இப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் படம் எப்போது வெளியாகுமென கேள்வி எழுந்தது.

Ayalaan

இந்நிலையில் அயலான் படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் மே மாதம் 13ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை மொபைலிலேயே பார்ப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News