Naga Chaitanya About Samantha: நாக சைதன்யா நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி திரைப்படம் இம்மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது, நாக சைதன்யா பிரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனக்கும், சமந்தாவுக்கும் இடையேயான விவாகரத்து குறித்தும் அவர் பேசியிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாங்கள் நகர்ந்துவிட்டோம்


"நாங்கள் பிரிந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது, நாங்கள் முறையாக விவாகரத்து செய்து ஒரு வருடம் ஆகிறது. நீதிமன்றம் எங்களுக்கு விவாகரத்து வழங்கியது. நாங்கள் இருவரும் எங்கள் திருமண வாழ்வில் இருந்து நகர்ந்துவிட்டோம். எனது மண வாழ்க்கையின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு," என்று நடிகர் மேலும் கூறினார்,.



அன்பானவர்


"சமந்தா மிகவும் அன்பானவர் மற்றும் அனைத்து மகிழ்ச்சிகளுக்கும் தகுதியானவர். ஊடகங்கள் ஊகிக்கும்போது, எங்களுக்கு இடையே விஷயங்கள் மோசமாகிவிடுகின்றன. பொது பார்வையில், அந்த பரஸ்பர மரியாதை பறிக்கப்படுகிறது. அதைதான் நான் மோசமாக உணர்கிறேன்" என்றார், நாக சைதன்யா.


மேலும் படிக்க | வசூலில் பொன்னியின் செல்வன் 2ம் பாகம் 1ம் பாகத்தை தோற்கடிக்குமா!


தற்போது சோபிதா?


மஜிலி, ஏ மாய ச்சேசவே மற்றும் ஆட்டோநகர் சூர்யா போன்ற படங்களின் இணை நடிகர்களான நாக சைதன்யா மற்றும் சமந்தா, 2017இல் திருமணம் செய்து கொண்டனர். அக்டோபர் 2021இல் ஒரு கூட்டறிக்கையில் நட்சத்திரங்கள் சமூக ஊடகங்களில் தங்கள் பிரிவினையை அறிவித்தனர். இதற்கிடையில், நாக சைதன்யா தற்போது பொன்னியின் செல்வன் நடிகர் சோபிதா உடன் டேட்டிங் செய்வதாக கூறப்படுகிறது.


விவாகரத்து குறித்து சமந்தா


இந்த ஆண்டின் தொடக்கத்தில் அளித்த பேட்டியில், சமந்தா, "நான் எனது திருமண வாழ்வில் எனது 100 சதவீதத்தை கொடுத்தேன், அது பலனளிக்கவில்லை. ஆனால் நான் செய்யாத காரியத்திற்காக நான் என்னை தண்டித்துக் கொள்ளப் போவதில்லை, குற்ற உணர்ச்சியுடன் இருக்கப் போவதில்லை" என்றார்.


கடந்தாண்டு, சமந்தா, கரண் ஜோஹரின் நிகழ்ச்சியான காஃபி வித் கரண் 7இல் விருந்தினராக பங்கேற்றார். ​​அவரும் நாக சைதன்யாவும் இணக்கமாக இருக்கிறார்களா என்று நிகழ்ச்சியின்போது அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "எங்கள் இருவரையும் ஒரு அறையில் வைத்தால், கூர்மையான பொருட்களை மறைக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? ஆம், இப்போதைக்கு ஆனால் அது எதிர்காலத்தில் எப்போதாவது வரலாம்." என்றார். 


சமந்தா சமீபத்தில் அவரது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். மேலும், கடந்த மாதம் வெளியான சாகுந்தலம் படம் அவருக்கு சரியாக ஓடவில்லை. எனவே, அப்படத்தின் தயாரிப்பாளருக்கும், சமந்தாவுக்கும் வார்த்தை போர் நடைபெற்றது. இது பரபரப்பை உண்டாக்கியிருந்தாலும், சமந்தா தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். சிட்டாடல் சீரிஸின் இந்திய பதிப்பில் அவர் நடித்து வருகிறார்.


மேலும் படிக்க | Jawan Update: பொறுத்தது போதும்..வந்தாச்சு ஜவான் பட அப்டேட்..ரிலீஸ் எப்போது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ