சமந்தா தினமும் கேட்கும் மந்திரம் இதுவா... அவரே போட்ட பதிவு!

Samantha: சமந்தா தனது பிறந்தநாள் வாரம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில், அவர் தினமும் கேட்கும் மந்திரம் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : May 5, 2023, 08:16 PM IST
  • சமந்தாவின் நண்பர்கள் அவருக்கு கேக் வெட்டிய புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.
  • பிறந்தநாள் சர்ப்ரைஸ் கூடாது என சமந்தா கண்டீஷன் போட்டிருந்தார்.
  • அதை மீறி அவரின் நண்பர்கள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
சமந்தா தினமும் கேட்கும் மந்திரம் இதுவா... அவரே போட்ட பதிவு! title=

Samantha: கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சமந்தா, பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் வேண்டாம் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். ஆனால் அவரது நண்பர்கள் அதையும் மீறி சமந்தாவின் பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு சர்ப்ரைஸ் கேக் கட்டிங் மற்றும் பிறந்தாள் கொண்டாடங்களை செய்துள்ளனர். 

இதை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பதிவிட்டுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டங்களின் படங்கள் மற்றும் வீடியோவை அவர் வெளியிட்டார். சமந்தா அதில் "விதிமுறைகள் எளிமையானவை... சர்ப்ரைஸ் கூடாது, கேக் கூடாது, நிச்சயமாக பலூன்கள் கூடவே கூடாது" என தான் சொல்லியதாக பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க | Farhana: ஃபர்ஹானா பட பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

பிரபலங்கள் கமெண்ட்

இந்த பதிவின் கமெண்ட் செக்ஷனில், நடிகை மாளவிகா மோகனன் இதய ஈமோஜிகளை பறக்கவிட்டுள்ளார். ஃபார்ஸி நட்சத்திரம் புவன் அரோரா, "ஹேப்பிஸ்ட் பர்த்டே சமந்தா... ரோர்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.  படத்தில், சமந்தா ரூத் பிரபு தனது பிறந்தநாள் கேக்குடன் காணப்படுகிறார். இரண்டாவது படத்தில், தி ஃபேமிலி மேன் 2 சீரிஸ் படைப்பாளிகளான ராஜ் மற்றும் டி.கே. மற்றொரு படத்தில், சமந்தா சிட்டாடல் அணியின் குழுவின் அணியுடன் இருப்பதை காணலாம். 

படத்தில் அவருடன் இணைந்து நடித்த வருண் தவானும் இடம்பெற்றுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் அவரின் செயல்பாடுகள் குறித்தும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 108 சூர்ய காயத்ரி மந்திரத்தை ஸ்பாட்டிபை செயலில் கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

சமந்தா, சமீபத்தில் நடித்த சாகுந்தலம், கடந்த மாதம் வெளியானது. அதற்கு முன், நடிகை 2022இல் த்ரில்லர் யசோதாவில் நடித்தார். கடந்தாண்டு, அவர் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நடித்த காத்துவாகுல ரெண்டு காதல் படத்திலும் நடித்தார். நடிகை விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

சிட்டாடலில் சமந்தா

சமந்தா விரைவில் டோவ்ன்டன் அபே, இயக்குனர் பிலிப் ஜானுடன் இணைந்து அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் என்ற திட்டத்தில் பணியாற்றவுள்ளார். ராஜ் மற்றும் டி.கே இயக்கும் ரூசோ பிரதர்ஸ் சிட்டாடலின் இந்திய பதிப்பிலும் நடிகை சமந்தா இடம்பெறுவார். இவர்களுடன் முன்பு பேமிலிமேன் 2 சீரிஸிலும் சமந்தா இணைந்து பணியாற்றினார்.

சமீபத்தில் வெளியான சாகுந்தலம் படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறாத நிலையில், சமந்தாவுக்கும், அந்த படத்தின் தயாரிப்பாளருமான புஜ்ஜி பாபுவுக்கும் இடையே நடந்த கருத்து மோதல் சமுக வலைதளங்களில் பலத்த விவாதங்களை கிளப்பின. 

மேலும் படிக்க | வீட்டு வாசலுக்கு சென்ற ரசிகர்! விக்ரம் செய்தது என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News