Samantha Ruth Prabhu Buys Lavish Duplex In Hyderabad: இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தமிழில் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலமாக அறிமுகமாக இருந்தாலும் , தெலுங்கில் நடித்த ஏ மாயா சேஸாவே மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து தமிழ், தெலுங்கில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.பின்னர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த காலகட்டத்தில் சமந்தா பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி பிரம்மாண்டமாக நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து நான்கு வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதி 2021 ஆம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தனர். இதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே சமந்தா அவருடைய பெயருக்கு பின்னால் இருந்த அக்கினேனி என்ற குடும்ப பெயரை அதிரடியாக சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கினார். இதன் மூலம் குறுகிய காலத்தில் இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதனால் சமந்தா திருமணமான போது நாகசைதன்யாவுடன் வசித்து வந்த அதே வீட்டில்தான் வசித்து வருகிறார். தனது விவாகரத்திற்குப் பின் இந்த வீட்டிற்காக மொத்தம் 100 கோடி ரூபாய் சமந்தா கொடுத்ததாக தகவல் வெளியானது.


மேலும் படிக்க | தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்த போண்டா மணி... ஏன் தெரியுமா?



இந்த நிலையில் தற்போது நடிகை சமந்தா, ஹைதராபாத்தின் ஜெயபேரி ஆரஞ்ச் கவுன்டி பகுதியில் புதிய வீடு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த வீட்டை அவர் 7.8 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். இந்த வீடு 13 ( 7,944 சதுர அடி) மற்றும் 14 மாடியில் ( 4,024 சதுர அடி) அமைந்துள்ளது. இந்த வீட்டில் மொத்தம் ஆறு பார்க்கிங் வசதிகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இந்த வீட்டின் உள்புற வடிவமைப்பு மொத்தமும் முடிந்துவிட்டதாகவும் மிகவும் நவீனமான முறையில் இந்த வீடு கட்டமைக்கப் பட்டுள்ளதாகவும் தெரியவந்திருக்கிறது.


நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 100 கோடி என்று சொல்லப் படுகிறது. இந்த மதிப்பு அவருக்கு சொந்தமான வீடு, லேண்ட் ரோவர், பிஎம்டபிள்யூ ஆகிய கார்களையும் உள்ளடக்கியது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதனிடையே தற்போது நடிகை சமந்தா ராஜ் மற்றும் டீகே இயக்கும் ‘சிட்டாடெல்’ என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் சமந்தாவுடன் இணைந்து பாலிவுட் நடிகர் வருன் தவான் நடிக்கிறார். அத்துடன் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் வெளிவரவிருக்கிறது. முன்னதாக நேற்று நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் பிறந்த நாளை முன்னிட்டு குஷிப் படத்தில் முதல் பாடல் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க | 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவனுடன் நடிக்கும் மீரா ஜாஸ்மின்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ