சமந்தாவின் OTT அறிமுகமான Family man 2 நேற்று வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதும் இந்த படம் பல பாராட்டுகளைப் பெற்று வருகிறது, மேலும் சமந்தாவின் அற்புதமான நடிப்பையும் பலரும் மிகவும் ரசித்து பாராட்டி வருகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமந்தா வழக்கமாக சமூக ஊடகங்களில் (Social Media) ஆக்டிவாக இருக்கும் நடிகையாவார். அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் தனது பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் சமந்தா Family man 2 தொடரின் இயக்குனர்களுடனான தனது புகைப்படத்தை வெளியிட்டார். இதில் அவர் ராணுவ சீருடையில் காணப்படுகிறார். 


தனது புகைப்படத்தை பகிர்ந்துகொண்ட சமந்தா, "ராஜியின் கதாபாத்திரத்தை சித்தரிப்பதற்கு உணர்திறன் மற்றும் சமமான மனநிலை தேவைப்படும் என நான் உணர்ந்தேன். ஈழப் போரில் பெண்களின் கதைகளை உள்ளடக்கிய தமிழ் போராட்டத்தின் ஆவணப்படங்களை படைப்புக் குழு பகிர்ந்து கொண்டது. அந்த ஆவணப்படங்களைப் பார்த்தபோது, நீண்ட காலத்திற்கு ஈழத் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளைப் பார்த்து ​​நான் திகைத்து அதிர்ச்சியடைந்தேன். மேற்கூறிய ஆவணப்படங்களை சில ஆயிரம் பேர்கள் மட்டுமே கண்டுள்ளார்கள் என்பதையும் நான் கவனித்தேன். ஈழத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் உயிர் இழந்துகொண்டிருந்த போது உலகம் வேறு பக்கம் திரும்பிக் கொண்டது. மேலும், லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் இழந்தனர். எண்ணற்றோர் வேறு நாடுகளுக்கு சென்று விட்டனர். உள்நாட்டு சண்டையின் காயங்கள் அனைவரது இதயங்களிலும் மனங்களிலும் புதிதாக உள்ளது" என்று அவர் எழுதியுள்ளார். Family Man 2 படத்தில் ராஜி என்ற ஈழத்தமிழ் போராளியாக சமந்தா (Samantha) நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



ALSO READ: Vaccine Hesitancy: இரட்டை வேடத்தில் விழிப்புணர்வு வீடியோவில் அசத்தும் வரலட்சுமி


சமந்தா மேலும் தனது பதிவில், "ராஜியின் கதை, கற்பனையானது என்றாலும், ஒரு சமமில்லாத போரினால் இறந்தவர்களுக்கும், போரால் நாட்டை விட்டு சென்றவர்களுக்கும் இது ஒரு அஞ்சலி. ராஜியின் சித்தரிப்பு குறித்து நான் கனவமாக இருந்தேன். ராஜி ஒரு சீரான, நுணுக்கமான, உணர்திறன் மிக்க கதாப்பாத்திரம். ராஜியின் கதை நமக்கு ஒரு தெளிவான தேவையான நினைவூட்டலாக இருக்கும். மனிதர்களான நாம் அனைவரும் அடக்குமுறை மற்றும் பேராசைக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை இந்த கதாபாத்திரம் உணர்த்துகிறது. நாம் அவ்வாறு செய்யத் தவறினால், எண்ணற்றவர்களுக்கு அவர்களின் அடையாளம், சுதந்திரம் மற்றும் சுய உரிமை மறுக்கப்படும் " என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 


தனது முதல் OTT தொடரின் (OTT Release) வெற்றியால் சமந்தா மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார். அடுத்ததாக அவர் சரித்திர படமான சாகுந்தலத்தில் காணப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவர் சகுந்தலையின் வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ:தியானமே சிறந்த பரிசு - ரசிகர்களுக்கு சமந்தாவின் சிபாரிசு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR