பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சமந்தா!

ஆட்டோ ஓட்டும் பெண்மணிக்கு தன்னுடைய சொந்த செலவில் கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.

Written by - ZEE Bureau | Last Updated : Apr 20, 2021, 04:05 PM IST
பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சமந்தா!

தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகைகளில் ஒருவரானவர் சமந்தா (Samantha Akkineni). இவர் பெண் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு 12 லட்சம் மதிப்புள்ள புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாம் ஜாம் என்ற தொலைக்காட்சி (TV Show) நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஆட்டோ ஓட்டுநர் கவிதா என்பவர் கலந்து கொண்டார். அவர் தனக்கு 7 சகோதரிகள் இருப்பதாகவும், தன்னுடைய பெற்றோர்கள் இறந்துவிட்டதால் குடும்பத்தைக் காப்பாற்ற தான் ஆட்டோ ஓட்டி வருவதாகவும் சமந்தாவிடம் தெரிவித்தார். மேலும் ஆட்டோ ஓட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானம் தங்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை என்றும் அந்த பெண் தெரிவித்தார்.

ALSO READ | விக்னேஷ் சிவனை கலாய்த்த சமந்தா! செம்ம வைரல் வீடியோ!

அதனை கேட்டு நடிகை சமந்தா (Samantha), அவரின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு தன்னால் இயன்ற உதவியை செய்வதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி அந்த பெண்ணுக்கு தன்னுடைய சொந்த செலவில் ஒரு கார் ஒன்று வாங்கி தருவதாகவும், அதை வைத்து டிராவல்ஸ் நடத்தினால் அதிகப்படியான வருமானம் பெறலாம் என்று அந்த பெண்மணிக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. இந்த செயலை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் (Social Media) பாராட்டு வருகின்றனர். 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை சமந்தா தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News