தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்ணனி நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தன் தனிச்சிறப்பு மிக்க நடிப்பை வெளிப்படுத்தி “ஃபேமிலிமேன் 2” தொடர் மூலம் இந்திய அளவில் சிறந்த நடிகையாக, நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ளார். நடிகை சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க, ஹரி-ஹரீஷ் கூட்டணி இப்படத்தில் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படம் வரும் ஆகஸ்ட் 12 முதல் உலகம் முழுதும் பிரமாண்டமாக வெளியாகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பிரபல நடிகைக்கும் வினய்க்கும் திருமணம்?


இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் கூறியதாவது, "நடிகை சமந்தா “யசோதா” படத்தில் நடிப்பில் மட்டுமின்றி சண்டைக்காட்சிகளிலும் அசத்தியுள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படத்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிடுகிறோம். மே மாத இறுதியில் படப்பிடிப்பு முடிவடையும். இந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படம்  இந்திய அளவிலான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு இழுக்கக்கூடிய கதைக்களத்தை கொண்டுள்ளது. சமீபத்தில் ஒரு பிரமாண்ட செட்டில் ஒரு பெரிய ஷெட்யூலை முடித்துவிட்டு, இன்று கொடைக்கானலில் அடுத்தகட்ட  படப்பிடிப்பிற்கு செல்கிறோம்.



இப்படத்தில் சமந்தா உடன், வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்" என்று கூறினார்.  இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார்.  நாக சைதன்யாவுடன் விவகாரத்திற்கு பிறகு, சமந்தா புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.  இந்த மாத இறுதியில், காதுவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாக உள்ள நிலையில், யசோதா படத்தின் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.  


மேலும் படிக்க | அட இத கவனிக்காம விட்டாச்சே! பீஸ்ட் படத்தில் நடித்திருக்கும் சமந்தா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR