சந்தியா ராகம் அப்டேட்: களம் இறங்கிய தனா.. மாயா மானத்தை வாங்க கணக்கு போடும் ஷாரு!
Sandhya Raagam Zee Tamil serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சந்தியா ராகம் சீரியலில் மாயாவின் மானத்தை வாங்க ஷாரு மற்றும் அவளது அம்மா திட்டம் போடுகின்றனர்.
Sandhya Raagam: தமிழ் சின்னத் திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியாராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தனா மாயாவின் கெட்டப்பில் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ஷாரு தன்னுடைய அம்மாவை கூப்பிட்டு மாயா வீட்டை விட்டு வெளியேபோன மாதிரி தெரியுது, உடனே இந்த விஷயத்தை எல்லார்கிட்டயும் சொல்லி பெரிய பிரச்சனையை ஆக்க வேண்டும். மாயத் திரும்ப இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது என்று சொல்கிறார். அதற்கு அவளது அம்மா இப்போ எதுவும் செய்யக்கூடாது என கூறுவதுடன், எல்லாரும் கூடி இருக்கும்போது சபையில் வைத்து தான் மாயா மானத்தை வாங்க வேண்டும் என திட்டம் போடுகிறார்.
அதன்பிறகு ஜானகி, பத்மா, பார்வதி, மணிவண்ணன், ரமணி என எல்லோரும் கூடியிருக்க சாருவின் அம்மா என் பொண்ணு சடங்குகளை எல்லாம் முறையா கடைப்பிடிக்கிறதா?, எனக்கு என்னவோ மாயாவால தான் பிரச்சனை வரும்னு தோணுது என்று சொல்ல ஜானகி அப்படியெல்லாம் அவளால எந்த பிரச்சனையும் வராது. எனக்கு முழு நம்பிக்கை இருக்கு என சொல்கிறாள். உடனே சாருவின் அப்பா பார்வதியை கூப்பிட்டு இப்ப எதுவும் சொல்லாத சபையில் வைத்து தான் மாயா பத்திய உண்மையை உடைக்கணும் என சொல்கிறார்.
மறுபக்கம் தனா மேட்சுக்கு வர, கார்த்திக் அவளை பார்த்து சந்தோஷப்பட பேட்மிட்டன் போட்டியின் முதல் சுற்றில் ஜெயித்துக் காட்டுகிறாள். இங்கே ரூமுக்கு வரும் ஜானகி டல்லாக இருக்க ரகுராம் என்ன ஆச்சு எனக்கு தெரிஞ்சு மாயாவை நினைச்சு தான் நீ இப்படி இருப்ப, எனக்கும் அவளால தான் பிரச்சனை வரும்னு தோணுது என்று சொல்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ