OTT Release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்! முழு லிஸ்ட்..

Latest OTT Release Movies List In Tamil : வாரா வாரம் புதுப்புது படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவது போல, இந்த வாரமும் பல புது படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா?   

Written by - Yuvashree | Last Updated : Mar 14, 2024, 11:56 AM IST
  • இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்
  • இதில் எந்த படம், எந்த தளத்தில் வெளியாகிறது
  • பிரம்மயுகம், வடக்குப்பட்டி ராமசாமி என பல படங்கள் லிஸ்டில் உள்ளது
OTT Release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்! முழு லிஸ்ட்.. title=

Latest OTT Release Movies List In Tamil : திரையரங்குகளில் படங்கள் வரிசையாக வெளியாகி வந்தாலும், ஓடிடி தளங்களின் வருகையால் வெற்றி பெற்ற படங்களும் சில நாட்களுக்குள்ளாகவே ஓடிடி தளங்களில் வெளிவர ஆரம்பித்து விடுகின்றன. இதில், சில படங்கள் நேரடியாகவும், சில படங்கள் திரையரங்குகளில் வெளியான பிறகும் வெளியிடப்படுகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பல நல்ல படைப்புகள், தென்னிந்திய திரையுலகில் இருந்து வந்துள்ளன. அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. அவற்றை எந்த தளத்தில் பார்க்கலாம்? எப்போது பார்க்கலாம்? முழு விவரம் இங்கே. 

ஹனுமன்:

ஹனுமன் திரைப்படம், கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில், பிரபல தெலுங்கு நடிகரான தேஜு ஷாஜா ஹீரோவாக நடித்திருந்தார். ஆக்‌ஷன்-அட்வென்சர் படமான இது திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதில் அம்ரிதா, வரலக்‌ஷ்மி சரத்குமார், வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஜியோ சினிமா தளத்தை நாளை முதல் (மார்ச் 15) பார்க்கலாம். 

பிரம்மயுகம்:

சமீப காலங்களில் மலையாள படங்கள் தென்னிந்திய அளவில் (குறிப்பாக தமிழகத்தில்) நல்ல வரவேற்பினை பெற்றன. அப்படி அதீத வரவேற்பினை பெற்ற படங்களில் ஒன்று, பிரம்மயுகம். இந்த படத்தில் மம்மூட்டி லீட் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் தியேட்டர்களில்  ரசிகர்களின் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது ஓடிடி தளங்களிலும் வெளியாக உள்ளது. சோனி லிவ் தளத்தில் இப்படத்தை மார்ச் 15 (நாளை) முதல் பார்க்கலாம். 

வடக்குப்பட்டி ராமசாமி:

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைத்த படம், வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ஏற்கனவே அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. தற்போது இப்படம் ஆஹா தமிழ் ஒடிடி தளத்திலும் நாளை வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

மேலும் படிக்க | கோடிகளில் புரளும் ராஷ்மிகா! பெரிய வீடு-சொகுசு கார்..மாெத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Nandivarman

நந்தி வர்மன்:

ஆஷா கௌடா, சுரேஷ் ரவி, நிழல்கள் ரவி, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்த படம், நந்தி வர்மன். கடந்த ஆண்டு வெளியான இந்த படம், தற்போது டெண்ட் கொட்டா தளத்தில் வெளியாக இருக்கிறது. 

Save The Tigers

ஆட்டம்:

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம், ஆட்டம். இந்த படத்தை ஆனந்த் ஏகார்ஷி நடித்திருக்கிறார். இப்படம் தேசிய திரைப்பட விருதுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. பாலியல் துன்புருத்தல் குறித்தும், அதற்கு பின்னால் இருக்கும் ஆடவரின் முகம் குறித்தும் கூறும் கதை இது. இந்த படம், மலையாள மொழியில் அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

பிற படங்கள்:

மார்ச் 15ஆம் தேதியன்று மேற்கூறிய படங்கள் மட்டுமன்றி இன்னும் சில படங்களும் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?

  • >மைன் ஆடா ஹூன் -இந்தி- ஜீ 5
  • >மர்டர் முபாரக்-இந்தி-நெட்ஃப்ளிக்ஸ்
  • >ஆப்பில்ஸ் நெவர் ஃபால்-ஆங்கிலம்-ஜியோ சினிமா
  • >ஐரிஷ் விஷ்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
  • >மேன் ஹண்ட்-ஆங்கிலம்-ஆப்பிள் டிவி
  • >சேவ் தி டைகர்ஸ் சீசன் 2-தெலுங்கு-ஹாட்ஸ்டார் 
  • >மங்கு பாஇ ஃபாக்சி ராணி -கன்னடம்-ப்ரைம்
  • >டர்னிங் பாய்ண்ட்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் தொடர்
  • >பிக் கேர்ள்ஸ் டோண்ட் க்ரை-இந்தி-ப்ரைம் தொடர்
  • >ஃப்ரிடா-ஆங்கிலம்-ப்ரைம் டாக்குமெண்டரி
  • >சிக்கன் நக்கட்ஸ்-கொரியன்-நெட்ஃப்ளிக்ஸ் தொடர்
  • >டெய்லர் ஸ்விஃப்ட் எராஸ் டூர்-ஆங்கிலம்-ஹாட்ஸ்டார்
  • >24 ஹவர்ஸ் வித் கேஸ்பர்-இந்தோனேஷியன்-நெட்ஃப்ளிக்ஸ்

மேலும் படிக்க | ‘விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்க இருந்த ‘அந்த’ நடிகர்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News