நடிகர் சந்தானம் அடுத்ததாக புதுச்சேரியை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய படம் புதுச்சேரியில் படமாக்கப்படுகிறது. அதன்படி அந்த படத்திற்கான பூஜை புதுச்சேரியில் போடப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து நடிகர் சந்தானம் (Actor Santhanam) புதுசேரி முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆசி பெற்றார். மேலும் முழு படமும் புதுச்சேரியில் தயாரிக்கப்படுவதாகும் புதுச்சேரி (Puducherry) அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


ALSO READ | சபாபதி பட போஸ்டர் விவகாரம்; திராவிட கழகம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்


இதற்கு முதலமைச்சர், புதுச்சேரி படபிடிப்பிற்கு வரும் அனைவருக்கும் தனது அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்று உறுதி அளித்தார். அத்துடன் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டதை குறைக்க பல நடிகர்கள் கோரிக்கை வைத்திருப்பதையும் நடிகர் சந்தானம் நினைவு கூர்ந்த முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் வெளியூர் சென்று உள்ளதாகவும், அவர் வந்த பிறகு புதுச்சேரியில் படப்பிடிப்புக்கான கட்டணம் குறைக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.


இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய நடிகர் சந்தானம், புதுச்சேரியில் முழு படமும் படமாக்கப்படும் என்றும், இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் ஆசி பெற்றதாகவும், மேலும் புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட படப்பிடிப்பிற்கான வரியை குறைக்க கோரி உள்ளதாகவும் தெரிவித்தார்.


ALSO READ | மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வது சமூக பண்பல்ல: சந்தானத்திற்கு கண்டனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR