Varalaxmi Nicholai Wedding Expenses Details : தமிழ் திரையுலகில் மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகிலேயே கவனிக்கத்தக்க நாயகியாக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். 80கள் மற்றும் 90களில் பிரபல ஹீரோவாக கொடிக்கட்டி பறந்த சரத்குமார் மற்றும் சாயாவின் மகளான இவர், 2012ஆம் ஆண்டில் திரையுலகிற்குள் நுழைந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரலக்ஷ்மி சரத்குமார்:
வரலக்ஷ்மி (Varalaxmi Sarathkumar), முதன் முதலாக நாயகியாக அறிமுகமான திரைபடம் போடா போடி. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவிற்கு ஜோடியாக இந்த படத்தில் வரலக்ஷ்மி நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது துருதுரு நடிப்பால் பலரை கவர்ந்திருந்தார். இயல்பாகவே ஜாலியான சுபாவம் கொண்ட இவர், தொடர்ந்து தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வருகிறார். எனினும் பாலா இயக்கியத்தில் இவர் நடித்த தாரை தப்பட்டை படம் இவருக்கு வேறு முகத்தை கொடுத்தது. வரலட்சுமி, நாயகியாக மட்டுமன்றி, முக்கிய வேடங்களிலும் வில்லியாக நடித்த படங்களும் கூட நல்ல வெற்றியை பெற்றிருக்கின்றன. குறிப்பாக விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2, மாரி 2, சர்கார், வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களில் தனது வேறு பிம்பத்தை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


திருமண நிச்சயதார்த்தம்:
இதனிடையே தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வந்த வரலக்ஷ்மிக்கு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. வெகு சில உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர். மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சாச்தேவ் (Nicholai Sachdev) என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர் ஆர்ட் கேலரி ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். அது மட்டுமன்றி, சில நடிகைகளுக்கு அவர் தனிப்பட்ட புகைப்பட கலைஞராகவும் இருப்பதாக கூறப்படுகிறது.



 



மேலும் படிக்க | Kalki 2898 AD Box Office Collections: கல்கி 2898 AD பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. 10 நாட்களில் இவ்வளவு கலெக்ஷனா?


கோலாகலமாக நடந்த திருமணம்:
நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு கடந்த ஜூலை 3ம் தேதி நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது காதலர் நிக்கோலை சச்தேவ் (Varalaxmi Nicholai Wedding) என்பவரை திருமணம் செய்துகொண்டார். மெஹந்தி, சங்கீத் விழாக்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிலையில், திருமணம் வெளிநாட்டில் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் நேரில் வந்து தங்களின் வாழ்த்துககளை தெரிவித்து இருந்தனர்.



800 கோடி திருமண செலவு?
இந்நிலையில் தற்போது வரலக்ஷ்மி திருமணத்திற்கு ஆன செலவு பற்றி நடிகர் சரத்குமார் (Sarathkumar) விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார். அதன்படி பலர் வரலக்ஷ்மி திருமணதிற்கு 800 கோடி செலவு செய்ததாக செய்திகள் போடுகின்றனர், ஆனால் 800 கோடி எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இதனால் பலர் உண்மையில் இவ்வளவு பிரம்மாண்ட திருமண விழாவிற்கு எவ்வளவு தான் செலவாகி இருக்கும் என்று பேசி வருகின்றனர்.


மேலும் படிக்க | Indian 2 First Review: இந்தியன் 2 படத்தின் முதல் விமர்சனம் இதோ.. படம் எப்படி இருக்கு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ