கல்கி 2898 AD பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. 10 நாட்களில் இவ்வளவு கலெக்ஷனா?

Kalki 2898 AD Box Office Collections: கடந்த வாரம் வெளிவந்த கல்கி திரைப்படத்தின் மொத்தம் வசூல் நிலவத்தை இந்த கட்டுரையில் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 7, 2024, 02:48 PM IST
  • இதுவரை 805 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனை.
  • கல்கி 2898 ஏடி திரைப்படம் விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டும்.
கல்கி 2898 AD பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. 10 நாட்களில் இவ்வளவு கலெக்ஷனா? title=

Kalki 2898 AD Box Office Collections: இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. படம் வெளியாகி 10 நாட்களான நிலையில், தற்போது படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்ப்போம்.

கல்கி 2898 ஏடி : 
கல்கி 2989 ஏடி திரைப்படத்தை, நாக் அஷ்வின் இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக இப்படத்தின் வேலைகள் நடைப்பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் பிரமாண்டமாக வெளியானது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். தீபிகா படுகோன், திஷா பதானி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

மகாபாரத போர் மற்றும் கல்கி அவதாரத்தை அடிப்படையாக வைத்து இப்படம் (Kalki 2898 AD) இயக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இந்த படம் சயின்ஸ்-ஃபிக்ஷன் மற்றும் புராணக்கதையை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 

கேமியோ கதாப்பாத்திரங்கள்:
கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் பல்வேறு எதிர்பார்க்காத நடிகர்களை இற்க்கியிருக்கின்றனர். அதன்படி துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா, ராம் கோபால் வர்மா மற்றும் எஸ்எஸ் ராஜமௌலி ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களின் பாத்திரங்கள் ரசிகர்களிடையே குறிப்பிடத்தக்க சலசலப்பை உருவாக்கியுள்ளன. அதனுடன் கூடிய விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளவு வசூல்:
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 805 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்து வருகிறது. தமிழகத்தில் இந்த திரைப்படம் 31  கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தியில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைப்பதற்காக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க | OTT Releases : புது ஓடிடி ரிலீஸ்கள்! எந்த தளத்தில், எதை பார்ப்பது?

கல்கி 2898 ஏடி கதை
கல்கி 2898 ஏடி படம் இந்துக்களின் புராணமான மகாபாரதம் மற்றும் விஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கி அவதாரம் என இரண்டையும் மிக்ஸ் செய்து இந்த படத்தை உருவாக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் வயிற்றில் வளரும் கல்கியை அழிக்க சுப்ரீம் யாஷ்கின் துடித்துக் கொண்டிருக்க, சுமதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனை காப்பாற்ற அஸ்வத்தாம்மா தியானத்தில் இருந்து எழுகிறார். அவரிடம் இருந்து சுமதியை கொண்டு சென்று யாஷ்கினிடம் கொடுத்தால் காம்ப்ளக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்கலாம் என நினைக்கும் பைரவா பிரபாஸ் கர்ணனின் அவதாரம் என முதல் பாகத்தின் கதையை முடித்துள்ளனர்.

மேலும் படிக்க | நடிகை அதுல்யா வீட்டில் நடந்த சம்பவம்.. சிசிடிவி மூலம் மாட்டிக் கொண்ட பணிப்பெண்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News