ரமணியம்மாள் தனது மேடைபெயரான ராக்ஸ்டார் ரமணி அம்மாள் எனப் பிரபலமாக அறியப்பட்ட ஒரு இந்திய நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட பின்னணி பாடகியும் ஆவார். 1954இல் சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் பிறந்த இவர் 2017 ஆம் ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ச ரி க ம ப சீனியர்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு இவர் பிரலாமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ச ரி க ம ப சீனியஸ் நிகழ்ச்சியின் தொடக்க பதிப்பின் நடுவர்களிடமிருந்து "ராக்ஸ்டார்" என்ற புனைப்பெயரைப் பெற்றார். மேலும், இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் என்றப் படத்தில்  ‘தண்டட்டி கருப்பாயி’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் மூத்த நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த பாடல் பற்றிய நிகழ்ச்சியின் முதல் பத்து இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரான இவர், ஏப்ரல் 15, 2018 அன்று நடந்த இறுதி போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தார்.


மேலும் படிக்க | 4 மெகா ஹிட் சீரியலை நிறுத்தப் போகும் விஜய் டிவி..காரணம் இதுதானா?


ச ரி க ம ப நிகழ்ச்சியுடனான வெற்றியைத் தொடர்ந்து, ஜூங்கா (2018), சண்டக்கோழி 2 (2018), காப்பான் (2019) மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா (2019) ஆகிய படங்களில் பாடுவதற்கான பல திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றார். மேலும் இவர் இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தனது மேடை நிகழ்ச்சிகளில் சிறுதும் தயக்கமின்றி நடுவர்கள், பார்வையாளர்கள், இரசிகர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதன் பின்னர் 2018 ஆம் ஆண்டில், தொலைக்காட்சித் தொடரான யாரடி நீ மோகினியின் ஒரு அத்தியாயத்திலும் இவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். 



இந்த நிலையில் நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட பின்னணி பாடகியுமான ரமணி அம்மாள் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 63 ஆகும். ரமணி அம்மாள் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவுக்கு பலர் சமூக வலைத்தளம் மூலமாக தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | என்னுடைய இந்த கனவு நினைவேறாமல் உள்ளது! வருத்தத்துடன் தெரிவித்த ரஜினிகாந்த்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ