சரிகமப சீசன் 3: பைனலில் 6 போட்டியாளர்கள், வெற்றி யாருக்கு? ஹாட் அப்டேட் இதோ
Saregamapa 3 Tamil Finale: சரிகமப சீசன் 3 யின் கிராண்ட் பைனல் பற்றி வெளியான ஹாட் அப்டேட் பற்றி பார்க்கலாம்.
சரிகமப சீசன் 3 கிராண்ட் பைனல் அப்டேட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்க பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடுவர்களாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வித்தியாசமான ரவுண்டு நடத்தப்பட்டு ஒவ்வொரு நபர்களாக வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆறு போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அவர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. அக்ஷயா
2. ஜீவன்
3. புருஷோத்தமன்
4. லக்ஷனா
5. ராகவர்ஷினி
6. நாகார்ஜுன்
ஆறு பேருமே திறமையான போட்டியாளர்களாக நல்ல ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நிலையில் இவர்களில் வெற்றி பெறப்போவது யார் என்று எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் வரும் ஜூன் 18 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை ஆண்டு மாலை 6 மணி முதல் தொடர்ச்சியாக 5 மணி நேரம் நேரலையாக ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராண்ட் பைனலிலும் வெற்றியாளர் யார் என்பதை மக்கள் மிஸ்டு கால் கொடுத்து ஓட்டுகள் பதிவு செய்து தேர்வு செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ