சரிகமப-ல் இந்த வாரம் சேலஞ்ச் ரவுண்ட்.. பைனலுக்கு செல்ல போகும் 5-வது போட்டியாளர்கள் யார்?

சரிகமப நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் தற்போது வரை அக்ஷயா, ஜீவன், புருஷோத்தமன், லக்ஷனா ஆகியோர் பைனலுக்கு முன்னேறியுள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 10, 2023, 10:27 AM IST
  • சரிகமப நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
  • அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ், ரம்யா நம்பீசன் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
  • 23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடைபெற்று வருகிறது.
சரிகமப-ல் இந்த வாரம் சேலஞ்ச் ரவுண்ட்.. பைனலுக்கு செல்ல போகும் 5-வது போட்டியாளர்கள் யார்? title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
 
அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், கார்த்திக், விஜய்  பிரகாஷ், ரம்யா நம்பீசன்  நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். 23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் தற்போது வரை அக்ஷயா, ஜீவன், புருஷோத்தமன், லக்ஷனா ஆகியோர் பைனலுக்கு முன்னேறியுள்ளனர். மீதமுள்ள போட்டியாளர்களில் மேலும் ஒருவர் அல்லது 2 பேருக்கு பைனலுக்கு செல்லும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க | மே மாதத்தில் மட்டும் OTTயில் ஜியோ சினிமா செய்த சரித்திர சாதனை!

இந்த நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் சவாலான பாடல்களை தேர்வு செய்து பாடும் சேலஞ்ச் ரவுண்ட் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | நயன் - விக்கியை துரத்திய நான்கு பிரச்சனைகள்! சோதனை காலம் என பதிவிட்ட விக்கி

இந்த ரவுண்டின் மூலம் பைனலுக்கு செல்ல போகும் 5-வது போட்டியாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து கிராண்ட் பைனல் நிகழ்ச்சி வரும் ஜூன் 18-ம் தேதி மாலை 6 மணி முதல் தொடர்ச்சியாக 5 மணி நேரம் நேரடி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிராண்ட் பைனலுக்கு செல்ல போவது 5 போட்டியாளர்களா? அல்லது 6 போட்டியாளர்களா? மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கும் நாகர்ஜுனா அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவாரா? என்பதை அறிய சரிகமபவில் இந்த வார சேலஞ்ச் ரவுண்டை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | முதலாம் ஆண்டு திருமணநாள்.. மகன்களுடன் நயன்தாரா: வைரலாகும் புகைப்படம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News