சீதா ராமன் அப்டேட்: மகாவுக்கு மரண பயத்தை காட்டிய சீதா.. எதிர்பாராத திருப்பம்!!

Seetha Raman Today's Episode Update: மரண பயத்தை காட்டிய சீதா, மகா விட்ட சவால் - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 1, 2023, 10:58 AM IST
  • உன்னை ராமிடம் இருந்து பிரிக்கறேன்: சீதாவிடம் சவால் விடும் மகா
  • மகாவை துப்பாக்கியால் சுட்ட சீதா
  • சீதாவிடம் எதிர் சவால் விடும் மகா..
சீதா ராமன் அப்டேட்: மகாவுக்கு மரண பயத்தை காட்டிய சீதா.. எதிர்பாராத திருப்பம்!!  title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

இந்த சீரியலில் மகா சூர்யா கஞ்சா கடத்தியது உண்மை தான் என மதுமிதாவை நம்ப வைக்க திட்டம் போட்டு அதற்கான வேலைகளை செய்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

உன்னை ராமிடம் இருந்து பிரிக்கிறேன்: சீதாவிடம் சவால் விடும் மகா

அதாவது, வீட்டுக்கு வந்ததும் மகா நீ நினைக்கிற மாதிரி சூர்யா நல்லவன் இல்லை என்று சொல்ல மதுமிதா கண்ணீருடன் ரூமுக்கு செல்கிறாள். அதன் பிறகு மகா சீதாவிடம் அவ்வளவு தான், இனிமே மதுமிதாவும் சூரியாவும் எப்போதும் சேரவே மாட்டாங்க, சூர்யாவே வந்து சொன்னா கூட மது நம்ப மாட்டா, அடுத்து என்னுடைய டார்கெட் நீ தான், உன்னை ராமிடம் இருந்து பிரிக்கறேன் என்று சொல்கிறாள். 

மதுமிதாவுக்கு புரிய வைக்கும் சீதா

இதனால் சீதா கோபமாக மதுமிதா ரூமுக்கு சென்று உனக்கு சூர்யாவை 7 வருஷமாக தெரியும், அவர் நீ நினைக்கிற மாதிரி தப்பானவர் கிடையாது, அதனை நீ தான் எல்லாருக்கும் எடுத்து சொல்லி புரிய வைக்கணும் என சொல்ல மதுமிதா நீங்க எல்லாரும் எனக்காக பொய் சொல்றீங்க, சூர்யாவுக்கு அவனுடைய முதலாளி பணம் தரலைனு சொல்றாரு, வீட்டுக்கு அட்வான்ஸ் 4 லட்சம் குடுத்திருக்கிறாரு, அப்போ இந்த பணம் எல்லாம் எப்படி வந்தது என மதுமிதா பேச சீதா அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறாள்.

மேலும் படிக்க | ‘கலக்கப் போவது யாரு’ தீனாவிற்கு திருமணம்…மணப்பெண் யாரென்று தெரியுமா?

மகா மீது உச்சகட்ட கோவத்தில் சீதா

ஆனாலும் மதுமிதா சூர்யா தப்பானவன் தான் என்பதை முழுமையாக நம்ப சீதா அவர் மேல எந்த தப்பும் இல்லனு நான் நிரூபித்து காட்டுறேன் என சவால் விட்டு வெளியே வருகிறாள். மகா மீது உச்சகட்ட கோபத்தில் வரும் சீதா துப்பாக்கியை எடுத்து கொண்டு மகாவை சுட போக மீரா தடுக்கிறாள். ஆனால் துரை மகாவை இப்படி தான் பண்ணனும் என ஏத்தி விடுகிறான். 

மகாவை துப்பாக்கியால் சுட்ட சீதா

இங்கே மகாவை அர்ச்சனா, சுபாஷ் உள்ளிட்டோர் நீ சொன்ன மாதிரியே செஞ்சிட்ட என பாராட்டி பேசி கொண்டிருக்க சீதா துப்பாக்கியுடன் வந்து ஆவேசமாக பேச மகா எங்க சுடு பார்க்கலாம் என தில்லாக சொல்ல சீதா துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுகிறாள். ஆனால் கடைசி நிமிடத்தில் மீரா துப்பாக்கியை தள்ளி விட்டதால் குண்டு ஒரு பூ தொட்டி மீது பட்டு மகா உயிர் தப்பிக்கிறது. 

பிறகு சீதா அவ்வளவு தான் நான் யோசிக்கவே மாட்டேன் என்று சொல்வது மட்டுமில்லாமல் இனிமே நீங்க தான் எனக்கு எதிரி, உங்களுடைய திட்டம், உண்மையான முகம் என எல்லாத்தையும் நான் வெளியே கொண்டு வருவேன், என் அக்காவை சூர்யாவுடன் நான் சேர்த்து வைப்பேன் என சவால் விட மகா இதெல்லாம் உன்னுடைய கற்பனை உன்னால் ஒன்னும் செய்ய முடியாது என சொல்கிறாள்.

சீதாவிடம் எதிர் சவால் விடும் மகா

மேலும் உன்னையும் ராமையும் பிரித்து மதுமிதாவை இந்த வீட்டுக்கு மருமகளாக கொண்டு வரேன் என பதிலுக்கு சவால் விடுகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ‘லியோ’ முதல் ‘விடா முயற்சி’ வரை..இந்த மாதம் வெளியாகவுள்ள தமிழ் சினிமா அப்டேட்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News