தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா சுபாஷிடம் பத்திரிகையை எடுத்து சென்று கொடுத்து பயம் காட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


சுபாஷை கலாய்க்கும் சீதா


அதாவது, சுபாஷ் பயந்து போய் நான் போகட்டுமா என்று கேட்க சீதா அவனை கலாய்த்து அனுப்பி வைக்கிறாள். அதனை தொடர்ந்து சேது சுபாஷை நாம் ஐதராபாத் அனுப்பிடலாம், இப்போதைக்கு அது தான் சரியாக இருக்கும் என்று சொல்ல மகாவும் சம்மதம் தெரிவிக்கிறாள். 


அதை தொடர்ந்து சேது சுபாஷை கூப்பிட்டு நீ சொப்னாவை கூட்டிட்டு ஐதராபாத் கிளம்பிடு, அங்க போய் சொப்னாவுக்கு எல்லாத்தையும் செட்டில் செய்து டிவோர்ஸ் பண்ணிட்டு வா, அப்பதான் உனக்கு இந்த சொத்துல பங்கு கிடைக்கும், இல்லனா உனக்கு ஒண்ணுமே இல்ல என்று சொல்லி ஷாக் கொடுக்க சுபாஷும் சம்மதம் தெரிவிக்கிறான். 


அடுத்ததாக மகா அர்ச்சனாவை அழைத்து சென்று நாளைக்கு மீராவுக்கு ஒரு பையனை பார்க்க போகணும் என்று சொல்லி மறுநாள் சூர்யாவின் ஓனர் வீட்டிற்கு அழைத்து செல்கிறாள், மிகவும் பணக்கார குடும்பமாக இருப்பதை பார்த்த அர்ச்சனா இவ்வளவு பெரிய இடத்துல அவளை எதுக்கு கட்டி கொடுக்கணும்? அவளை கொடுமை படுத்துற இடத்துல கட்டி கொடுக்கணும் என்று சொல்கிறாள். 


மேலும் படிக்க | ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம்


மீராவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் மகா


பிறகு அந்த வீட்டில் ஒருவன் ரெண்டு பெண்களுடன் கல்யாணம் ஆன போட்டோக்கள் இருக்க மொத்தமாக போதைக்கு அடிமையாகிய ஒருவன் தான் மாப்பிள்ளை என்பது தெரிய வருகிறது, சைக்கோ போல நடந்து கொள்ளும் இவனுக்கு தான் மீராவை கட்டி கொடுக்க போவதாக சொல்ல அர்ச்சனா சந்தோசப்படுகிறாள். பிறகு அந்த போதை ஆசாமி நான் காலேஜ் படிக்கிறதுல இருந்தே இப்படி போதைக்கு அடிமையாகிட்டேன் என்று சொல்ல மகா எல்லாம் அப்பா சொன்னாரு என்று சொல்லி மீரா 7 வருஷமாக ஒருத்தருடன் ரிலேஷன் ஷிப்பில் இருந்ததாக சொல்ல எல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்கிறான். 



அதோடு கடைசில் இந்த கல்யாணம் மட்டும் நடக்காமல் போனால் உங்க ரெண்டு பேரையும் சும்மா விட மாட்டேன், கொன்னுடுவேன் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறான். மறுபக்கம் மீராவும் சத்யனும் சந்தித்து கொள்ள சத்யன் தாலி ஜெயினை எடுத்து காட்ட மீரா சந்தோசப்படுகிறாள். பிறகு இவர்கள் வீட்டிற்கு வர மீராவை பெண் பார்க்க சூர்யாவின் ஓனர் குடும்பம் வந்திருக்க எல்லாரும் குழப்பம் அடைகின்றனர். 


மீராவை பெண் பார்க்க வரும் குடும்பம்


மகா மீராவை அழைத்து சென்று உன்னை பொண்ணு பார்க்க தான் வந்திருக்காங்க, நீ ரெடியாகிட்டு வா என்று சொல்ல மீரா முடியாது என்று மறுக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் மகா மீராவை அடிக்க கை ஒங்க சீதா தடுத்து நிறுத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Hansika: காந்த கண்களால் சுண்டி இழுக்கும் ஹன்சிகா மோத்வானி..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ