தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராம் தனது ஷேரை சீதா பெயருக்கு மாற்றி எழுதிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது, மீண்டும் அவமானப்பட்ட அர்ச்சனா கோபத்தில் உள்ளே சென்று விட மகா எல்லாத்துக்கு நீ தான் காரணம் என சீதாவை திட்டி விட்டு செல்கிறாள். இதனால் சீதா ரூமுக்குள் வந்து கண்ணீர் விட்டு அழ ராம், துரை ஆகியோர் சீதாவை சமாதானம் செய்கின்றனர். 


சீதாவுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் ராம்


ராம் நான் இல்லாத போது இந்த வீட்டில் உன்னை எப்படியெல்லாம் கொடுமை படுத்தினாங்க என்று எனக்கு தெரியும், நீ ஏன் இப்படி மாறிட்ட. நீ பழையபடி தைரியமா இருக்கணும் என பேசி தன்னம்பிக்கை கொடுக்க சீதா இனிமே இப்படி இருக்கா மாட்டேன் என வாக்கு கொடுக்கிறாள். 


மேலும் படிக்க | ரெடின் கிங்ஸ்லியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?


சீதாவை வேலை வாங்கும் கல்பனா 


மறுபக்கம் அர்ச்சனா டீம் செம அப்செட்டில் இருக்க அவள் தங்கச்சி கல்பனா சோடா புட்டி போட்டி இருக்கவே அந்த சீதாவை சாதாரணமாக எடை போட்டுட்டேன், அவளை சும்மா விட மாட்டேன் என்று சொல்லி கீழே வந்து சீதாவிடம் காபி கேட்கிறாள். திருப்பி திருப்பி ஏதோ ஒரு காரணத்தை சொல்லி சீதாவை வேலை வாங்கி கொண்டே இருக்கிறாள். ஒரு கட்டத்தில் சீதா காபியில் மிளாகாய் பொடியை கலந்து கொடுத்து பதிலடி கொடுக்கிறாள். இதனால் இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது. 



காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | கமலை ஓரம் கட்டும் பிக்பாஸ்! 5 நடிகர்களை தேர்வு செய்துள்ள நிறுவனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ