தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 


சீதாவை மீட்க ஏற்பாடுகள்


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா கடத்தப்பட சேது ஐஜி வரை பேசி சீதாவை உடனடியாக கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் மகாலட்சுமி வீட்டில் கடத்தப்பட்டவர்கள் பணத்திற்காக போன் செய்தால் அவர்களை டிரேஸ் செய்து பிடிப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கின்றனர். 


மறுபக்கம் சீதாவை கடத்திய ரவுடி போலீசுக்கு போன் போட்டு கிட்நாப் குறித்து ஏதாவது கேஸ் பைலாகி இருக்கா என கேட்க அந்த போலீஸ் சீதா கடத்தப்பட்ட கேஸ் பதிவாகி இருப்பதாகவும் இப்போதைக்கு போன் பண்ணி மாட்டிக்காத எனவும் எச்சரிக்கிறார்.


சீதாவை கொல்ல திட்டமிடும் ரவுடிகள்


அதனைத் தொடர்ந்து ரவுடி இது பெரிய பிரச்சினையாகி விட்டது, வேற மாதிரி தான் டீல் பண்ணனும் சீதாவுக்கு நம்முடைய முகம் தெரிஞ்சு போச்சு அவ உயிரோட இருந்தா நமக்கு ஆபத்து என அவளை கொன்று விட திட்டம் போடுகின்றனர். 


இங்கே ராம் வீட்டுக்கு வர துரை சீதா காணாமல் போன விஷயத்தை சொல்ல மகாலட்சுமி நீ டென்ஷனாகாத இது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது என்று சொல்ல எப்படி டென்ஷன் ஆகாமல் இருக்க முடியும் சீதாவுக்காக கவலைப்பட இந்த வீட்டில் நான் மட்டும்தான் இருக்கேன் என ராம் கோபப்படுகிறான். மேலும் இது மூன்று தங்கச்சிகளும் சேர்ந்து செய்த சதியாக கூட இருக்கும் என சந்தேகப்பட மகாலட்சுமியும் அர்ச்சனாவும் அதிர்ச்சி அடைகின்றனர்.



இன்னும் பத்து நிமிஷத்துல அவங்க மூணு பேரும் இங்கே இருக்கணும் நடந்தது என்ன என்பதை நான் விசாரிக்கணும் என ராம் ஆர்டர் போட மகாலட்சுமி நான் வர சொல்றேன் என்று சொல்லி போனை வாங்கி கொண்டு கீழே செல்கிறாள்.


தப்பித்து ஓடும் சீதா


அஞ்சலிக்கு போன் போட்டு சீதா காணாமல் போன விஷயம் வீட்டில் போலீஸ் இருக்கும் விஷயத்தை சொல்லி தண்ணி வாங்குறதுக்காக இறங்கி போனாங்க ரொம்ப நேரம் ஆகியும் வரல, காலேஜ் லேட்டானதால் கிளம்பி போயிட்டோம் என்பதை மட்டும் சொல்லணும், வேற எதையும் பேசக்கூடாது என சொல்லி போனை வைக்கிறாள். மறுபக்கம் சீதா ரவுடிகள் பிடியிலிருந்து தப்பி ஓடி வர ரவுடிகள் அவளை பிடிக்க பின் தொடர்ந்து வருகின்றனர். 


மேலும் படிக்க | 'அனிமல்' திரைப்படத்தின் 'நீ என் உலகம்' பாடல் வெளியானது..!


இங்கே வீட்டிற்கு மீராவும் சக்தியனும் வந்து இது திட்டமிட்ட வேலையா கூட இருக்கும் என மகாலட்சுமியை எதிர்த்து கேள்வி கேட்க சேது இது யாரோ பணத்துக்காக பிளான் பண்ணி தான் பண்ணி இருக்காங்க என கூறுகிறார். உன்ன தெரிய வரட்டும் இந்த முறை யாரையும் மன்னிக்கப் போவதில்லை சீதாவுக்கு அண்ணனா நாளைக்கு துணையாக நிற்பேன் என சத்தியன் கூறுகிறான். அடுத்ததாக தப்பி ஓடும் சீதாவை ரவுடிகள் செங்கல் எடுத்து தலையில் அடித்து சரிந்து விட வைக்கின்றனர். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | ஓடிடியில் வெளியாகும் படங்களை டவுன்லோட் செய்வது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ