தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சீதா மதுவை பார்க்க உள்ளே போக முயற்சி செய்த நிலையில் செக்யூரிட்டி தடுக்க இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


செக்யூரிட்டியை மிரட்டி உள்ளே செல்லும் சீதா


அதாவது, செக்யூரிட்டி தடுக்க சீதா உனக்கு வேலை முக்கியமா? உயிர் முக்கியமா என அவனை மிரட்டி உள்ளே செல்கிறாள். உள்ளே அர்ச்சனா, சுபாஷ், சேது என எல்லாரும் உன்னை காப்பாற்றியது ராம் தான் என சொல்லி கொண்டிருக்க ராம் நான் இல்லை சீதா தான் மதுவை காப்பாற்றினாள் என்று சொல்லும் போது சீதா உள்ளே வருகிறாள். 



மனமுடைந்து பேசும் மதுமிதா


சீதாவை பார்த்ததும் அர்ச்சனா உட்பட எல்லாரும் கோபப்பட்டு வெளியேறி செக்யூரிட்டியை திட்ட அவன் அது பொண்ணா? இல்ல பேயா? கொன்னுடுவேன்னு மிரட்டவே பயந்து உள்ளே விட்டுட்டேன் என்று சொல்கிறான். அதன் பிறகு சீதா மதுவிடம் நீ எதுக்கு இப்படி பண்ண என்று கேட்கும் போது எனக்கு வேற வழி தெரியல என மனமுடைந்து பேசுகிறாள். 



மேலும் படிக்க | Megha Akash: தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம்..இவர்தான் மாப்பிள்ளையா..?


மீண்டும் மயக்கமாகும் மதுமிதா


மேலும் மது இதற்கெல்லாம் அப்பா தான் காரணம் என மொத்த பழியையும் தூக்கி ராஜசேகர் மீது போட சீதா மதுவை சமாதானம் செய்ய முயற்சி செய்ய மது மீண்டும் மயக்கம் அடைகிறாள். 



வீட்டை விட்டு ஓடும் செக்யூரிட்டி


இங்கே வீட்டில் செக்யூரிட்டி மதுவுக்கு மாத்திரை வாங்கி கொடுத்தது நான் தான் என்ற விஷயம் மகாலட்சுமிக்கு தெரிந்தால் என்னவாகும் என பயந்து கொண்டிருக்க ராமின் தங்கைகள் எல்லாரும் வந்து செக்யூரிட்டியை இங்க இருந்து ஓடி போய்டு என மிரட்டுகின்றனர். வீட்டு வேலைக்காரி செல்வியும் உயிர் முக்கியம்னா இங்க இருந்து ஓடிடு என சொல்ல செக்யூரிட்டி அங்கிருந்து ஓடி விடுகிறான். 


மதுமிதாவை காண வரும் ராஜசேகர்


அதற்கு அடுத்தடுத்தாக மது தற்கொலைக்கு முயன்ற விஷயம் தெரிந்து ராஜசேகர் ஹாஸ்பிடல் வர அர்ச்சனா டீம் அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்த சீதா வெளியே வந்து அப்பாவை உள்ளே அழைத்து செல்ல முயற்சி செய்கிறாள். நீங்க தான் மது உங்க பொண்ணே கிடையாதுன்னு சொல்லிடீங்களே, அவ உங்களை பார்க்க விரும்ப மாட்டா என்று சொல்ல சீதா எல்லாரையும் தாண்டி ராஜசேகரை உள்ளே அழைத்து செல்கிறாள். 


அதிர்ச்சி கொடுக்கும் மதுமிதா


பிறகு சீதா மதுவை எழுப்பி அப்பா வந்திருக்கும் விஷயத்தை சொல்ல மதுமிதா தனக்கு அப்பாவை பார்க்க விருப்பம் இல்லை என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறாள். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | திருப்பதி கோயிலில் பிரபல நடிகைக்கு முத்தம் கொடுத்த ‘ஆதிபுருஷ்’ இயக்குநர்..வைரல் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ