“காம காட்டேரி..!”: விஷ்ணுகாந்த் மானத்தை வாங்கும் சம்யுக்தா! இன்ஸ்டாவில் ஆதாரங்களை அடுக்கி குற்றச்சாட்டு!

காதல் கவிதைகள் பாடிய விஷ்ணுகாந்த் சம்யுக்தா ஜோடி இப்போது டாம் அண்ட் ஜெர்ரி போல சண்டையிட்டு வருகிறது. இப்போது விஷ்ணுகாந்த் ஒரு காம காட்டேரி என ஓப்பனாக போஸ்ட் போட்டுள்ளார் சம்யுக்தா. 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Jun 7, 2023, 06:05 PM IST
  • சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த போது விஷ்ணுகாந்த் - சம்யுக்தா இடையே காதல் மலர்ந்தது.
  • இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது.
  • திருமணம் நடந்த 15 நாட்களுக்குள் இவர்கள் பிரிந்துவிட்டதாகவும், விவாகரத்து வாங்கப்போவதாகவும் பல தகவல்கள் உலா வந்தன.
“காம காட்டேரி..!”: விஷ்ணுகாந்த் மானத்தை வாங்கும் சம்யுக்தா! இன்ஸ்டாவில் ஆதாரங்களை அடுக்கி குற்றச்சாட்டு!  title=

சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் - நடிகை சம்யுக்தா விவகாரம் தான் இப்போது சின்னத்திரையில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை ரோமியோ ஜூலியட் ரேஞ்சில் இன்ஸ்டாவில் காதல் கவிதைகள் பாடிய இந்த ஜோடி இப்போது டாம் அண்ட் ஜெர்ரி போல சண்டையிட்டு வருகிறது. அதிலும் இப்போது விஷ்ணுகாந்த் ஒரு காம காட்டேரி என ஓப்பனாக போஸ்ட் போட்டுள்ளார் சம்யுக்தா. அதோடு பல திடுக்கிடும் ஸ்கீன் ஷாட்டுகளையும் வெளியிட்டுள்ளார். 

சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த போது விஷ்ணுகாந்த் - சம்யுக்தா இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த ஜோடி இன்ஸ்டாவில் ஆக்டீவாக தங்கள் காதல் ததும்பும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். அதோடு இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த 15 நாட்களுக்குள் இவர்கள் பிரிந்துவிட்டதாகவும், விவாகரத்து வாங்கப்போவதாகவும் பல தகவல்கள் உலா வந்தன. இருவரும் தங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக இணைந்து வெளியிட்ட புகைப்படங்களை நீக்கினார்கள். 

அதன்பிறகு பல யூடியூப் சேனல்களுக்கு பறந்து பறந்து ஒருவர் மீது ஒருவர்  குற்றம்சாட்டி பேட்டி கொடுத்தார்கள். அதிலும் விஷ்ணுகாந்த் செக்ஸ் டார்சர் செய்ததாக சம்யுக்தா பரபரப்பு குற்றம்சாட்டினார். இதனால் கடுப்பான விஷ்ணுகாந்த் உடனே சம்யுக்தாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு எனப் பேசி வீடியோ வெளியிட்டார். 

இப்படி சோஷியல் மீடியாவே மிரளும் அளவுக்கு மாற்றி மாற்றி மோசமாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில் இரு தினங்களுக்கு முன்பு விஷ்ணுகாந்த் வெளியிட்ட வீடியோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சம்யுக்தா அவர் மீது படு மோசமான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் அடுக்கியுள்ளார். அதன்படி, விஷ்ணுகாந்த்துக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் வரை சென்று அந்த திருமணம் நின்று விட்டதாகவும், ஆனால் அந்த காம காட்டேரிகிட்ட நான் மாட்டிக்கிட்டேன் என்றும் இன்ஸ்டா ஸ்டோரியில் எழுதியுள்ளார். 

மேலும் படிக்க | இரண்டு பெரிய இந்திய பிரபலங்களுடன் சாகச நிகழ்ச்சி நடத்த ஆசைப்படும் பியர் கிரில்ஸ்..!

அதோடு சம்யுக்தா ஒரு நபருடன் சாட் செய்யும் ஸ்கிரீன் ஷாட்டை ஷேர் செய்து இது பப்பி லவ்வின் சாம்பிள் என பதிவிட்டார். அதற்கு சம்யுக்தா இப்படி எடிட் செய்து போட்டோ போட எனக்கும் தெரியும் என விஷ்ணுகாந்த் நடிகை சன்னி லியோனுடன் சேட் செய்தது போன்ற ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார்.

அதில், விஷ்ணுகாந்த் சன்னி லியோனிடம் லவ் பிரபோஸ் செய்வது போல உள்ளது. அந்த பதிவின் கீழ் எங்களுக்கும் எடிட் பண்ண தெரியும் என சொல்லி கலாய்த்துள்ளார் சம்யுக்தா.

உண்மையில் விஷ்ணுகாந்த் சன்னி லியோனுடன் சாட் செய்யவில்லை. ஆனால் அப்படி போலியாக எடிட் செய்து சம்யுக்தா வெளியிட்டுள்ளார். இதன்மூலம் விஷ்ணுகாந்த் தன்னைப் பற்றி வெளியிட்ட ஸ்கிரீன் ஷாட் போலி என அவர் கூறியுள்ளார். 

அதோடு விஷ்ணுகாந்த்தின் லீலைகள் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இதனால் இருவரின் ரசிகர்களும் செம டென்ஷனில் உள்ளனர். குடும்ப சண்டை வீதிக்கு வந்தால் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு கொண்டாட்டம் என்பது போல இப்போது இவர்கள் கதையும் அமைந்துவிட்டது.

மேலும் படிக்க | தொகுதியை குறிவைக்கும் விஜய்.. முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News