கோலிவுட் திரையுலகில் இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத்திறமையோடு வலம் வரும் இயக்குனர் செல்வராகவன். இவரது படங்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபகாலமாக படங்களில் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். பீஸ்ட் படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்த இவருக்கு அடுத்தடுத்து நடப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செல்வராகவனின் வெற்றி படங்களுள் ஒன்று, 7 ஜி ரெயின்போ காலனி. இந்த படம் 19 வருடங்களுக்கு முன்பு வெளியானது. தமிழ் சினிமாவில் வெளிவந்த  பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் இதுவும் ஒன்று. இவர், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  


7ஜி ரெயின்போ காலனி…


இருதலை காதலாக மாறும் ஒரு தலை காதல். கைகூடும் நேரத்தில் கண் முன்னே இறந்து போகும் காதலி. அவள் நினைவுடன் தன் வாழ்நாட்களை கடக்கும் நாயகன். இதுவே 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கதை. இந்த படத்தில் கதிர் என்ற கதாநாயகனின் கதாப்பாத்திரத்தில் ரவி கிருஷ்ணா நடித்திருந்தார். கதையின் நாயகியாக சோனியா அகர்வால் வந்தார். “உன்னை எல்லாம் என் மனசுல எங்க வச்சுருக்கேன் தெரியுமா..” என்ற இந்த படத்தின் டைலாக், இன்றளவும் பல ஒரு தலை காதலர்களுக்கு அவர்களின் காதலை கரெக்ட் செய்ய உதவி வருகிறது. 


மேலும் படிக்க | ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம்



இரண்டாம் பாகம்..


செல்வராகவன், தனது ப்ளாக் பஸ்டர் படம் ஒன்றில் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக முன்னரே தகவல்கள் வெளியாகின. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகங்களுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். ஆனால், இந்த படங்களை விடுத்து, அவர் 7 ஜி ரெயின்போ காலணி படத்தினை இயக்க உள்ளார். இந்த தகவலும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கதாநாயகி இவர்தானா..? 


7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்தில் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள், அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவரை அப்படத்தில் நடிக்க வைக்கும் முயற்சி பேச்சு வார்த்தை அளவிலேயே முடிந்து விட்டது. அடுத்து ‘லவ் டுடே’ நாயகி இவானாவை இந்த படத்தில் நடிக்க வைக்க இருப்பதாக கூறப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. தற்போது மலையாள நடிகையான அனஸ்வரா ராஜனை இந்த படத்தில் நடிக்க வைக்க உள்ளனர். 


அனஸ்வராவின் படங்கள்..


மலையாள நடிகையான அனஸ்வரா, பல மலையாள படங்களிலும் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். பிருத்விராஜ், மஞ்சு வாரியர் ஆகியோருடன் இணைந்து சில படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். தமிழில் வெளியான‘தக்ஸ்’படத்தின் கதாநாயகி இவர்தான். த்ரிஷா நாயகியாக நடித்திருந்த ராங்கி படத்திலும் முக்கிய கதாப்பாத்திரமாக வந்திருந்தார். 


படக்குழு..


7 ஜி ரெயின்போ காலனி படத்தின் நாயகன் ரவி கிருஷ்ணா, அதன் இரண்டாம் பாகத்திலும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். முதல் பாகத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார். முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த சில கதாப்பாத்திரங்கள் இந்த பாகத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு, அடுத்த மாதம் முதல் வாரத்தில் தாெடங்க இருக்கிறது. 


மேலும் படிக்க | தளபதி 68 படத்தில் இணைந்த புதிய நடிகை..! அட இவங்களா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ