தமிழ் இயக்குநர் அட்லீ குமார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து இயக்கியிருக்கும் படம் ஜவான். இதில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அடுத்த மாதம் (செப்டம்பர் 7) திரைக்கு வர இருக்கும் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜவான் படம்:
ஜவான் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி இதில் வில்லனாக வருகிறார். பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல பாலிவுட் நாயகி தீபிகா படிகோன் ஜவான் படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர், இதில் ஷாருக்கானின் தாயாக வருகிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.  மேலும் இந்த படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 


பதான் சாதனையை முறியடிக்குமா..? 
இதயனிடையே 5 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 1000 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்தது. இந்த வசூல் சாதனையை ஜவான் முறியடிக்கும் என்று கூட சில ரசிகர்கள் டிவிட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளனர். பதான் படம், பான் இந்திய அளவில் வெளியாகும் திரைப்படமாக இருப்பதால் இந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | குஷி படத்தில் அதிக சம்பளம் வாங்கியது யார்? விஜய் தேவரகொண்டாவா? சமந்தாவா?


திருபதியில் நயன் - ஷாருக்:
இந்த நிலையில் ஜவான் திரைப்படம்  பெரும் வெற்றியடைய ஆசி வேண்டி  அத்திரைப்படத்தின் கதாநாயகன் ஷாருக்கான், கதாநாயகி நயன்தாரா ஆகியோர் உள்ளிட்டோர் நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்தனர்.  திருப்பதி மலையில் இரவு தங்கிய அவர்கள் இன்று அதிகாலை கோவிலுக்கு சென்று சாமி செய்தனர். இவர்களுடன் ஷாருக்கான் மகள் சுஹானா மற்றும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோரும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.



கோயிலின் பிரதான வாயிலில் ஷாருக்கானை வரவேற்ற அதிகாரிகள், தரிசன ஏற்பாடுகளைச் செய்தனர். தற்போது ஷாருக்கான் திருமலைக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



 



ஜவான் ட்ரெய்லர்:
முன்னதாக ஜவான் ட்ரெய்லர், பாடல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது. 


வைஷ்ணோ தேவி தரிசனம்:
கடந்த மாதம், ஷாருக்கான் ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கார்த்திகை தீபம் அப்டேட்: ஏற்றி விட்ட ஐஸ்வர்யா, அபிராமிக்கு ஷாக் கொடுத்த கார்த்திக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ